பொது செய்தி

தமிழ்நாடு

கல்வி உதவித்தொகை தேர்விற்கு மாணவர் விண்ணப்பிக்கலாம்

Added : ஜன 01, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு மாணவர்கள் தேசிய வருவாய்வழி, திறன்படிப்புதவி திட்டத்தின் கீழ், கல்வி உதவித்தொகை பெற ஜன.,8 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாவட்டத்தில் அரசு, நகராட்சி, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 2020-=21 கல்வி ஆண்டில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க திறனாய்வு தேர்வு பிப்.,21 ல்

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு மாணவர்கள் தேசிய வருவாய்வழி, திறன்படிப்புதவி திட்டத்தின் கீழ், கல்வி உதவித்தொகை பெற ஜன.,8 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மாவட்டத்தில் அரசு, நகராட்சி, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 2020-=21 கல்வி ஆண்டில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க திறனாய்வு தேர்வு பிப்.,21 ல் நடைபெற உள்ளது.பெற்றோரின் ஆண்டு வருமானம் ஒன்றரை லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விருப்பமுள்ள மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளியின் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.தலைமையாசிரியர்கள் தேவையான விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

புகைப்படம் ஒட்டி தேர்வு கட்டணம் ரூ.50 உடன் ஜன.,8 க்குகள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட கல்விஅலுவலகம், பள்ளி தலைமைஆசிரியரை மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம் என கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X