சென்னை :ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், ஏழு பேருக்கு, முதன்மை செயலர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது.தமிழ்நாடு வீட்டுவசதி துறைச் செயலர் கார்த்தி கேயன்; பணியாளர் நிர்வாகம் மற்றும் சீர்திருத்தத் துறைச் செயலர்ஸ்வர்ணா; டில்லி தமிழ்நாடு இல்லம் கமிஷனர் ஆஷிஸ் வச்சானி; தமிழ்நாடு மின்வாரிய தலைவர் பங்கஜ்குமார் பன்சால்.
![]()
|
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு; பணியாளர் மற்றும்நிர்வாக சீர்திருத்தம் பயிற்சித் துறைச் செயலர் ஹர்சகாய் மீனா; வணிகவரி மற்றும் பதிவுத் துறைச் செயலர் பீலா ராஜேஷ் ஆகியோர், முதன்மைச் செயலர்களாக, பதவி உயர்வு பெற்று உள்ளனர்.இதற்கான உத்தரவை, தமிழக அரசின் தலைமைச் செயலர் சண்முகம் பிறப்பித்துள்ளார். பதவி உயர்வு பெற்ற, ஏழு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும், 1997ல் ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்றவர்கள்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement