மதுரை : திருச்சி -ராமேஸ்வரம், பாலக்காடு - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்கவுள்ளது.
ஜன., 4 முதல் திருச்சியிலிருந்து காலை 7:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06849) மதியம் 12:15 மணிக்கு ராமேஸ்வரம் செல்லும். மறுமார்க்கத்தில் ராமேஸ்வரத்தில் மதியம் 2:35 மணிக்கு புறப்படும் ரயில் (06850) இரவு 8:05 மணிக்கு திருச்சி செல்லும். இந்த ரயிலில் 12 இரண்டாம் வகுப்பு இருக்கை, 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும்.இந்த ரயில்கள் குமாரமங்கலம், புதுக்கோட்டை, திருமயம், கோட்டையூர், காரைக்குடி, தேவகோட்டை ரோடு, கல்லல், சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், உச்சிப்புளி, மண்டபம், பாம்பன் ஸ்டேஷன்களில் நின்று செல்லும். '
ஜன., 4 முதல் திருநெல்வேலியில் இரவு 11:15 மணிக்குபுறப்படும் சிறப்பு ரயில்(06791) மறுநாள் மதியம் 12:50 மணிக்கு பாலக்காடு செல்லும். மறுமார்க்கத்தில் ஜன., 5 முதல் பாலக்காட்டில் மாலை 4:05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்(06792) மறுநாள் அதிகாலை 4:55 மணிக்கு திருநெல்வேலி செல்லும். இந்த ரயில்கள் சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், தென்காசி, கொல்லம், பெரிநாடு, முன்றோற்றுற்று, சாஸ்தான்கோட்டை, கருநாகப்பள்ளி, மாவேலிக்கரா, செறியநாடு, செங்கனுார், திருவல்லா, செங்கனாச்சேரி, கோட்டயம், குருப்பண்துறா, வைக்கம் ரோடு, பிரவம்ரோடு, முலன்றுருட்டி, திரிபுணத்துறா, எர்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூர், ஓட்டப்பாலம் ஸ்டேஷன்களில் நின்று செல்லும். பாலக்காடு செல்லும் சிறப்பு ரயில் பாவூர்சத்திரம், கிளிகொல்லுார், திருநெல்வேலி செல்லும் சிறப்பு ரயில் கீழ்க்கடையம் ஸ்டேஷன்களில் நிற்கும்.
இந்த ரயில்களில் நான்கு இரண்டாம் வகுப்பு படுக்கை, எட்டு இரண்டாம் வகுப்பு இருக்கை, 2 மாற்றுத்திறனாளிகள் பெட்டிகள் இணைக்கப்படும். இந்த ரயில்களில் பயணிக்க முன்பதிவு அவசியம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE