சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தரமில்லாத அம்மா உணவக சாப்பாடு: பொது மக்கள் புகார்

Added : ஜன 01, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே அம்மா உணவகத்தில் தரமின்றி பெயரளவில் உணவு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது ராமநாதபுரம் நகராட்சி சார்பில், புதிய பஸ் ஸ்டாண்ட், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் அம்மா உணவகம் மகளிர் சுய உதவி குழுவினர் மூலம் செயல்படுகிறது. இங்கு சாம்பார் சாதம் ரூ.5, இட்லி ரூ.1, தயிர்சாதம் ரூ.3 என குறைந்த விலைக்கு விற்பனை

ராமநாதபுரம் : ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே அம்மா உணவகத்தில் தரமின்றி பெயரளவில் உணவு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது

ராமநாதபுரம் நகராட்சி சார்பில், புதிய பஸ் ஸ்டாண்ட், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் அம்மா உணவகம் மகளிர் சுய உதவி குழுவினர் மூலம் செயல்படுகிறது. இங்கு சாம்பார் சாதம் ரூ.5, இட்லி ரூ.1, தயிர்சாதம் ரூ.3 என குறைந்த விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதன் காரணமாக பஸ் ஸ்டாண்ட்அருகேயுள்ள அம்மா உணவகத்திற்கு பலர் சாப்பிட வருகின்றனர்.

இந்நிலையில் இங்கு தரமின்றி உணவு தயார் செய்கின்றனர். ரசம்போல சாம்பார் உள்ளது, பெயரளவில் காய்கறி, பருப்பு பயன்படுத்துவதாக மக்கள் புகார்கூறுகின்றனர். மேலும் அம்மா உணவகம் அருகே கழிவுநீர் தேங்கி துர்நாற்றம்வீசுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதனை சுத்தம் செய்து, ஏழைமக்கள், கூலித்தொழிலாளர்கள் அன்றாடம் வந்து செல்லும் அம்மா உணவகத்தில்தரமான உணவு வழங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X