மதுரை : கொரோனா காலத்தில் மக்களை அதிகம் கவர்ந்த 2020ம் ஆண்டின் 'டாப் 50' கலைஞர்களில் என் பெயரும் இடம் பெற்றதில் மகிழ்ச்சி என்கிறார் சென்னை பாடகி நித்தியஸ்ரீ.
அவர் கூறியதாவது: முறைப்படி இசை கற்று தொலைக்காட்சி பாடல் நிகழ்ச்சியின் மூலம் என் இசை பயணத்தை துவக்கினேன். பிரபல பாடகர்களுடன் சினிமா, மேடை நிகழ்ச்சிகளில் பாடியுள்ளேன். 2020 பிப்.,க்கு பின் கொரோனா தீவிரமாக பரவியதால் ஊரடங்கு விதித்தனர். ஊரடங்கு என் இசை பயணத்திற்கு இடையூறாக இருந்ததால் GetNithyaFied என்ற என் 'யூ டியூப்' தளத்தில் சினிமா பாடல்கள், கவர் சாங், பன்மொழி மேஷ்சப், விலாக்ஸ் என பல வீடியோக்கள் வெளியிட்டேன். இதுவரை 300மில்லியன் பேர் பார்த்துள்ளனர். 9 லட்சம் ரசிகர்கள் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.
இந்நிலையில் தான் சென்னை நிறுவனம் ஒன்று 2020ல் மக்களை கவர்ந்த டாப் 50 கலைஞர்களை பட்டியலிட்டது. அதில் ரஜினி, ஏ.ஆர்.ரஹ்மான், தனுஷ், சமந்தா, விஸ்வநாதன் ஆனந்த் என பல கலைஞர்கள் இடம் பெற்றனர். இவர்களுடன் இசையால் மக்களை அதிகம் கவர்ந்த பாடகி என என் பெயரும் இடம் பெற்றதில் மகிழ்ச்சி.கொரோனா காலத்தில் தான் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் காலமானார். அவருடன் பயணித்த இளம் கலைஞர்களில் நானும் ஒருவள் என்ற அடிப்படையில் தினமலர் நாளிதழ் என் பேட்டியை வெளியிட்டது. அன்று தான் அவருடன் நான் மேடை பாடல்கள் பல பாடியது மக்களுக்கு தெரிந்தது.'டாப் 50'ல் இடம் பிடிக்க ஒரு காரணமாக இருந்த தினமலர், பெற்றோர், இணைய இசை ரசிகர்களுக்கு நன்றி, என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE