அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வின் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டும் சட்டசபை தேர்தல்

Added : ஜன 01, 2021
Share
Advertisement
பெருங்குடி : ''தி.மு.க.,வில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி தற்போது ஸ்டாலின் பேரன் ரெடியாகி விட்டார். தி.மு.க.,வில் கருணாநிதி குடும்பத்தினர் மட்டுமே பதவிக்கு வர முடியும். தி.மு.க.,வின் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டுவதாக வரும் சட்டசபை தேர்தல் அமைய வேண்டும்,'' என மதுரை பெருங்குடியில் முதல்வர் பழனிசாமி பேசினார்.ராமநாதபுரம், துாத்துக்குடி மாவட்ட தேர்தல் பிரசாரத்திற்காக

பெருங்குடி : ''தி.மு.க.,வில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி தற்போது ஸ்டாலின் பேரன் ரெடியாகி விட்டார்.

தி.மு.க.,வில் கருணாநிதி குடும்பத்தினர் மட்டுமே பதவிக்கு வர முடியும். தி.மு.க.,வின் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டுவதாக வரும் சட்டசபை தேர்தல் அமைய வேண்டும்,'' என மதுரை பெருங்குடியில் முதல்வர் பழனிசாமி பேசினார்.ராமநாதபுரம், துாத்துக்குடி மாவட்ட தேர்தல் பிரசாரத்திற்காக நேற்று மாலை விமானம் மூலம் முதல்வர் மதுரை வந்தார். அமைச்சர்கள் செல்லுார் ராஜூ, உதயகுமார், ராஜேந்திரபாலாஜி, எம்.எல்.ஏ., ராஜன்செல்லப்பா, கலெக்டர் அன்பழகன், மாநகராட்சி கமிஷனர் விசாகன், தென் மண்டல ஐ.ஜி., முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பெருங்குடியில் அ.தி.மு.க., கிழக்கு மாவட்டம் சார்பில் முதல்வருக்கு வீரவாள் வழங்கப்பட்டது. மண்டேலாநகரில் ஜெ., பேரவை சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. பெருங்குடியில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது: அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்தாண்டு இறைவன் அருளால் எல்லா வளங்களும் பெற்று இன்புற்று வாழ வாழ்த்துகிறேன். 2021 ல் சட்டசபை தேர்தல் நெருங்கி கொண்டுள்ளது. ஏப்ரல், மே யில் தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தலில் இரட்டை இலைக்கு ஓட்டளித்து வெற்றியை தேடித்தர வேண்டும்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் அ.தி.மு.க., அரசு நல்ல பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தொடர்ந்து பல நல்ல திட்டங்களை வழங்க மீண்டும் எங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். இது மக்கள் அரசு. மக்கள் என்ன எண்ணுகிறார்களோ அதை நிறைவேற்றுகிற அரசு.எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை தொடர்ந்து சிந்தாமல் சிதறாமல் செயல்படுத்தி வருகிறோம். ஆனால் திட்டமிட்டு தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்கிறார். தை பொங்கல் கொண்டாட அனைத்து அரிசி கார்டுதாரர்களுக்கும் ரூ.2500, முழு கரும்பு உள்ளிட்ட பரிசுத் தொகுப்பு வழங்குகிறோம்.

தி.மு.க., ஆட்சியில் இதுபோல கொடுத்துள்ளார்களா. ஏழைகள் வாழ்ந்த சரித்திரம் தி.மு.க., ஆட்சியில் உண்டா.எம்.ஜி.ஆர்., ஜெ., நாட்டுக்காக இறுதி காலம் வரை வாழ்ந்தார்கள். கருணாநிதி அவரது வீட்டு மக்களுக்காக வாழ்ந்தார். ஆட்சி செய்தார். கருணாநிதி குடும்பத்தினர் தான் வாழ முடிந்தது. அதிகாரத்திற்கு வர முடிந்தது. தி.மு.க.,வில் சாமன்ய தொண்டர்கள் யாரும் உயர் பதவிக்கு, அதிகாரத்திற்கு வர முடியாது என்றார். பின் மதுரை தனியார் விருந்தினர் மாளிகைக்கு சென்று தங்கினார்.அங்கு மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி முதல்வரை சந்தித்து ஆங்கில புத்தாண்டு ஆசி வழங்கினார். முதல்வர் கேக் வெட்டி பகிர்ந்தளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X