ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் பழனிச்சாமி இன்று வருகிறார். 14 இடங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
ராமநாதபுரத்தில் இன்று காலை 9:00 மணிக்கு பிரசாரத்தை துவங்கும் அவர் இரவு வரை பிரசாரம் செய்கிறார். பரமக்குடியில் முக்கியப்பிரமுகர்களை காலை 9:00 மணிக்கு சந்தித்துப் பேசுகிறார். அங்கு கட்சி நிர்வாகிகள், நெசவாளர் சங்கத்தினர், முக்கியபிரமுகர்களுடன் கலந்துரையாடு கிறார். மதியம் 12:00 மணிக்கு சத்திரக்குடியில் பொதுமக்களைச் சந்தித்துபேசுகிறார். பின்னர் ராமநாதபுரம் பட்டிணம் காத்தான் பகுதியில் தனியார் மஹாலில் மகளிர் சுய உதவிக் குழுவினரைச் சந்திக்கிறார்
.ராமநாதபுரம்- ராமேஸ்வரம் ரோட்டிலுள்ள தனியார் மகாலில் மதியம் 3:30 மணிக்கு முதல்வர் இளம்பெண்கள், பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவினரைச் சந்தித்துப் பேசுகிறார். மாலை 6:00 மணிக்கு கடலாடியில் கட்சி பொறுப்பாளர்களைச் சந்தித்துப் பேசுகிறார். பின்னர்சாயல்குடியில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இறுதியாக கன்னிராஜ புரத்தில் பனை வெல்ல தொழிலாளர்கள், உள்ளூர் பிரமுகர்களைசந்திக்கிறார். மாவட்டத்தில் மொத்தம் 14 இடங்களிலும் முதல்வர் தேர்தல் பிரசாரம்செய்ய உள்ளதை முன்னிட்டு நேற்று மாலை முதல் பார்த்திபனூர் தொடங்கி கன்னிராஜபுரம் வரையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
ஏற்பாடுகளைஅ.தி.மு.க., மாவட்டச் செயலர் முனியசாமி, மாநில மகளிரணி இணைச் செயலாளர் கீர்த்திகா, முன்னாள் எம்.பி., அன்வர்ராஜா மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பரமக்குடி சதன்பிரபாகர், ராமநாதபுரம் மணிகண்டன் செய்துள்ளனர்.--------
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE