பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் பொங்கல் உற்சவ திருவிழா

Added : ஜன 01, 2021
Share
Advertisement
அவிநாசி:கருவலுார் அருகில் உள்ள ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் பொங்கல் உற்சவ திருவிழா நடந்தது.பெரியகுரும்பபாளையத்தில், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், உற்சவ திருவிழா கடந்த, 22ம் தேதி துவங்கி, ஏழு நாட்கள் நடந்தது. தினமும், ஒரு கால அபிஷேக பூஜை, சிறப்பு அலங்காரம் நடந்து வந்தது.ஏழாம் நாளான, கடந்த, 29ம் தேதி இரவு அம்மன் திருக்கல்யாணம், கரகம் எடுத்தல் ஆகிய
 ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் பொங்கல் உற்சவ திருவிழா

அவிநாசி:கருவலுார் அருகில் உள்ள ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் பொங்கல் உற்சவ திருவிழா நடந்தது.பெரியகுரும்பபாளையத்தில், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், உற்சவ திருவிழா கடந்த, 22ம் தேதி துவங்கி, ஏழு நாட்கள் நடந்தது. தினமும், ஒரு கால அபிஷேக பூஜை, சிறப்பு அலங்காரம் நடந்து வந்தது.ஏழாம் நாளான, கடந்த, 29ம் தேதி இரவு அம்மன் திருக்கல்யாணம், கரகம் எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று முன்தினம் காலை, மகா தீபாராதணை, பொங்கல் வைத்தல், சிறப்பு பூஜை, அலங்காரம் நடந்தது. சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X