திருப்பூர்:முதுகலை கணினி பயிற்றுநருக்கான பணிநியமன கலந்தாய்வு நடக்கிறது.அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள கணினி பயிற்றுநர் நிலை - 1, காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் போட்டித்தேர்வு நடத்தப்பட்டு அதற்கான பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் தேர்வானவர்களுக்கு பணியிட ஒதுக்கீடு ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு நடக்கிறது.இதில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிக்கை:மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பட்டியலில் உள்ள தேர்வாளர்கள் தங்கள் மாவட்டத்தை சேர்ந்தவரா என்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லாவிடில், சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் தொழில்கல்வி இணை இயக்குனருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.தற்போது, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில், பத்தாம் வகுப்பில் ஒவ்வொரு பாடத்திலும், 35 சதவீத மதிப்பெண் பெற்றால் மட்டுமே தமிழ்நாடு அரசு வேலைக்கு தகுதியானவர் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஒரே ஆண்டில் இரட்டை பட்டம் பெற்றிருத்தல் கூடாது. இதனை கல்வித்தகுதி சான்றிதழ் அடிப்படையில் இதனை சரிபார்ப்பது அவசியம். மாற்றம் இருப்பினும் நியமன ஆணை வழங்காமல் நிறுத்தி வைக்கலாம். மொத்தத்தில் எவ்வித புகாருக்கும் இடமின்றி கலந்தாய்வை நடத்த வேண்டும்.இவ்வாறு, அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE