திருப்பூர்:கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு இ-பாஸ் கட்டாயம் என்பதால், ரயில் மூலம் வருவோர் எண்ணிக்கை அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து தமிழகம் வருவோருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கேரளா உட்பட பிற மாநிலங்களில் இருந்து வருவோருக்கு இ- பாஸ் கட்டாயம், என, அறிவிக்கப்பட்டுள்ளது.அண்டை மாநிலமான கேரளாவிலுள்ள எர்ணாகுளம், திருவனந்தபுரம், மங்களூரு - கொல்லம் வழியாக தினமும் மற்றும் வாரந்தோறும் என்ற வகையில், பத்து ரயில்கள் தமிழகம் வருகிறது. இதனால், கேரளாவின் பல பகுதியிலிருந்து, தமிழகத்துக்கு பலரும் ரயில் மூலம் வருகின்றனர்.தற்போது, இ - பாஸ் கட்டாயம் என்ற உத்தரவால், தமிழகத்துக்கு வருவோர் எண்ணிக்கை கூடுதலாக வாய்ப்புள்ளது. கேரளாவில் நோய் தொற்றின் வீரியம் தமிழகத்தை விட அதிகமாக உள்ளது. இச்சூழலில், தமிழகம் வருவோரால் ஆபத்து காத்திருக்கிறது. எனவே, அதற்கேற்ப மாநில எல்லையில் உள்ள ரயில்வே ஸ்டேஷன்களில் சுகாதாரத்துறை அலர்ட் செய்து கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE