திருப்பூர்:திருப்பூர் சுற்றுப்பகுதியில், வணிக ரீதியாக, அளவுக்கு மீறி, தண்ணீர் எடுத்து விற்பனை செய்யப்படுகிறது.அவ்வகையில், அனுப்பர்பாளையம்புதுார், சின்னக்காளிபாளையம் சுற்றுப்பகுதிகளில், தண்ணீர் எடுத்து விற்பனை செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.அப்பகுதியினர் கூறியதாவது:திருப்பூர் மாவட்டம், வறட்சி மிகுந்த பகுதியாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு, நிலத்தடி நீரை பாதுகாக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது. பல பகுதிகளில், அதிகளவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது.ஆனால், சிலர் தனியார் கிணறுகளில் இருந்து லாரி, டிராக்டர் மூலம் தண்ணீர் எடுத்து வணிக ரீதியதாக விற்பனை செய்து வருகின்றனர். நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதோடு, விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு தண்ணீர் இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எதிர்ப்பு தெரிவித்தால் மட்டுமே அவ்வப்போது வாகனங்களை பெயரளவில் பிடிக்கும் அரசு அலுவலர்கள், அன்றைய தினமே விடுவிக்கின்றனர். சட்ட விதிகளை மீறி, 'போர்வெல்' களில் இருந்து, தண்ணீர் எடுத்து வணிக ரீதியாக விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, வாகனங்களையும் பறிமுதல் செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE