திருப்பூர்:புத்தாண்டில் பூ விலை கிடுகிடுவென உயர்ந்தது. மல்லிகை பூக்கள் விலை கிலோ, 2,400 ரூபாயை எட்டியது.மார்கழி துவக்கம் முதல் கடும் பனிப்பொழிவு தொடர்வதால், பூ வரத்து, திருப்பூர் மார்க்கெட்டுக்கு குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பாக, 1.5 டன் மல்லிகை பூக்கள் வந்த நிலையில், 80 முதல், 100 கிலோ வருவதே அரிதாகவே உள்ளது. இதனால், கிலோ, 400 ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லிகை, கிலோ, 1,500 ரூபாயாக உயர்ந்தது.புத்தாண்டை முன்னிட்டு பூ வாங்க அதிகளவில் பெண்கள் பூ மார்க்கெட்டுக்கு வந்தனர். 30 கிலோ மல்லிகை மட்டுமே வந்தது. கிலோ, 2,600 ரூபாய்க்கு விற்றது.பூ வியாபாரிகள் கூறுகையில், 'திண்டுக்கல், நிலக்கோட்டை, சத்தி, சேலத்தில் இருந்து ஒரு டன் மல்லிகை பூ வரும். தற்போது, சத்தியில் இருந்து மட்டுமே பூ வருகிறது. மற்ற பகுதியில் இருந்து பூக்கள் வருவதில்லை. இதனால், பூ விலை 'கிடுகிடு' என உயர்ந்து விட்டது,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE