திருப்பூர்:உலகை விட்டே கொரோனா ஒழியட்டும் என வேண்டி, ஆங்கில புத்தாண்டான நேற்று, கோவில்களில் தீபம் ஏற்றி வைத்து, பக்தர்கள் வழிபட்டனர்.நிறைவடைந்துள்ள, 2020ம் ஆண்டில், கொரோனா எனும் அரக்கனின் கோரப்பிடியில் உலகம் சிக்கியிருந்தது. 'தீராத வினைக்கு தெய்வமே துணை' என்று உணர்ந்த மக்களும், தங்களது தெய்வங்களை வணங்கியும், பிரார்த்தனை செய்தனர்.நீண்ட சோதனைகளை நிகழ்த்திய, 2020 விடைபெற்று, 2021 புத்தாண்டு நேற்று கொண்டாடப்பட்டது. நள்ளிரவு நேரத்தில், 'கேக்' வெட்டி கொண்டாடுவது, ஆட்டம், பாட்டம் என்று கொண்டாடுவது குறைந்துவிட்டது.மாறாக, அதிகாலை முதல் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர். குடும்ப சகிதமாக கோவிலுக்கு சென்று, கொரோனாவை ஒழித்து கட்ட வேண்டுமென, அகல் விளக்குகள் ஏற்றி வைத்து வழிபட்டனர். இதுவரை இல்லாத அளவுக்கு, திருப்பூர் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், ஏராளமான பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.டிரைவருக்கு பாராட்டுதிருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரியில், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருப்பூர் மாவட்ட கிளை சார்பில் புத்தாண்டு கொண்டாடினர். மாவட்ட செயலாளர் தாமோதரன் தலைமை வகித்தார்.அதில், இலவச அமரர் ஊர்தி மற்றும் தாய்சேய் பாதுகாப்பு வாகன டிரைவர்கள் 'கேக்' வெட்டி, ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்தனர். அதேநேரம், கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காலத்தில் சிறப்பாக பணி புரிந்த அனைத்து டிரைவர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE