பொது செய்தி

இந்தியா

பேச்சு தோல்வியடைந்தால் போராட்டம் தீவிரமாகும்

Updated : ஜன 03, 2021 | Added : ஜன 01, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
புதுடில்லி :மத்திய அரசுடன், 4ம் தேதி நடக்க உள்ள பேச்சு தோல்வியடைந்தால், போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்' என, விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து, டில்லி எல்லையில், ஹரியானா, பஞ்சாப் மாநில விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள், 30 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.போராட்டத்துக்கு தீர்வு காண, விவசாய
பேச்சு தோல்வி,  போராட்டம் தீவிரம், விவசாயிகள், வேளாண் சட்டங்கள்,  நரேந்திரசிங்தோமர், தோமர், விவசாய அமைச்சர்

புதுடில்லி :மத்திய அரசுடன், 4ம் தேதி நடக்க உள்ள பேச்சு தோல்வியடைந்தால், போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்' என, விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து, டில்லி எல்லையில், ஹரியானா, பஞ்சாப் மாநில விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள், 30 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.போராட்டத்துக்கு தீர்வு காண, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன், மத்திய அரசு நடத்திய ஐந்து சுற்று பேச்சு தோல்வியடைந்த நிலையில், ஆறாவது சுற்று பேச்சு, சமீபத்தில் நடந்தது.

இதில், மின் கட்டணம், விவசாய கழிவுகளை எரிப்பவர்களுக்கு அபராதம் விதிப்பது ஆகிய பிரச்னைகளில் தீர்வு ஏற்பட்டது. எனினும், மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவது, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு, சட்டப்பூர்வமாக உறுதியளிப்பது ஆகிய விவகாரங்களில் தீர்வு ஏற்படவில்லை. இதையடுத்து, ஏழாம் சுற்று பேச்சு, 4ம் தேதி நடக்க உள்ளது.

இந்நிலையில், டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களின் தலைவர்கள் கூறியதாவது: நாங்கள் கூறியுள்ள பிரச்னைகளில், 5 சதவீதத்துக்கு மட்டுமே, இதுவரை தீர்வு காணப்பட்டுள்ளது. வரும், 4ம் தேதி மத்திய அரசுடன் நடக்க உள்ள பேச்சு தோல்வியடைந்தால், போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். தினமும், ஒரு போராட்டத்தை அறிவிப்போம். எங்களை கோரிக்கைகளை பரிசீலித்து, பிரச்னைக்கு தீர்வு காணும் பொறுப்பு, அரசிடம் தான் உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினார்.

மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியதாவது: விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நடந்த, ஆறாம் சுற்று பேச்சு, சுமூகமாக நடந்தது. ஏழாம் சுற்று பேச்சில் தீர்வு ஏற்படுமா என கூறுவதற்கு, நான் ஜோதிடர் இல்லை. விவசாயிகள் மற்றும் விவசாயத்துறையின் நலனை பாதுகாக்கும் வகையில், தீர்வு ஏற்படும் என, நம்புகிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
02-ஜன-202118:12:11 IST Report Abuse
RajanRajan 👆மரியாதைக்காக இதுநாள் வரை எந்த பழைய டாகுமெண்டுகளையும் வெளியே விடாமல் வைத்திருந்தார் மோதிஜி. ஆனால் அந்த மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளவும் ஒரு தகுதி வேண்டும். அந்தத் தகுதி தற்போதைய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சூனியா, ராகுல், ப.சிதம்பரம் மற்றும் எந்த திருட்டு வக்கீல்களுக்கும் கிடையாது என்பதால் ஒவ்வொன்றாக வெளிவருகிறது. இனிமேல்.. இப்படித்தான்.. தானாக படியாத மாட்டை தடி எடுத்துதான் படிய வைக்க வேண்டும்.. _________________________ "என்னால் 370 மற்றும் 35A மீது கை வைக்க இயலாது" - தன் பயத்தை 1981இல் நியூயார்க்கில் இருந்த டாக்டர் மித்ரா என்பவருக்கு தன் கடிதத்தில் எழுதிய அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி. அந்த பயம் மோதிக்கு இல்லை 56" ராக்ஸ் 👍🏼 அந்தக் கடிதத்தில், "உங்கள் கவலையை நானும் பகிர்கிறேன். காஷ்மீரை பூர்விகமாக நாமிருவரும் கொண்டிருந்தாலும், (370 மற்றும் 35A காரணமாக) அங்கே ஒரு துண்டு நிலமோ வீடோ வாங்க முடியாது என்பது வருந்தத் தக்க ஒன்று. ஆனால் தற்சமயம், இந்த விவகாரம் (370 மற்றும் 35A) பற்றி என் கையை மீறிய விஷயம். இந்திய ஊடகங்கள் வெளிநாட்டு ஊடகங்களுடன் சேர்ந்து கொண்டு என்னை எதேச்சதிகாரியாக காட்டிவருகிறார்கள் என்ற நிலையில் என்னால் இந்த விவகாரத்தில் எதுவும் செய்ய இயலாது. காஷ்மீர பண்டிட்டுகளும், பௌத்தர்களும் லடாக்கில் நியாயமற்ற முறையிலும் பாரபட்சமாகவும் நடத்தப்படுகிறார்கள் (என்பது உண்மை)" என்று குறிப்பிட்டிருக்கிறார் இந்திரா காந்தி... - காங்கிரஸ் இந்த கடிதத்தை எப்படிக் கையாளும்? 370 மற்றும் 35A க்கு இந்திரா காந்தியே பயந்திருக்கிறார். காஷ்மீரில் நடந்த கொடுமைகளையும் ஒப்புக் கொண்டுள்ளார். பிரதமராக இருந்தாலும், காஷ்மீரை பூர்விகமாக கொண்டவரானாலும் இந்திராவால் அங்கே ஒரு நிலம் வாங்க இயலாத நிலையை ஒப்புக் கொண்டுள்ளார்.
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
02-ஜன-202118:03:38 IST Report Abuse
Malick Raja விவசாயிகளை கொச்சைப்படுத்தி ,பிரித்து தனித்து செயல்பட நினைப்பது அறிவீனம் .. அறிவற்றவர்கள் விவசாயிகள் குறித்து கொச்சையான வார்த்தை கருத்துக்கள் ஏற்புடையதல்ல .. மனிதாபிமான சிந்தனை யற்றவர்கள் கருத்துக்கள் ஒன்றும் செய்யாது .. மாறாக விவசாயிகளை மேலும் வலுப்படுத்தும் ..
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
02-ஜன-202118:00:56 IST Report Abuse
vbs manian naattil நடக்கும் நல்லாட்சிக்கு வெட்டு வைக்கும் முயற்சி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X