திருப்பூர்:புத்தாண்டு பிறப்பு முன்னிட்டு அனைத்து பகுதியிலுள்ள தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடந்தன.பல்வேறு சோதனைகளை ஏற்படுத்திய, 2020 நிறைவடைந்து, 2021 புத்தாண்டு பிறப்பு, திருப்பூர் மாவட்டம் முழுவதும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தேவாலயங்களில் புத்தாண்டு பிறப்பின் போது வழக்கமாக நடைபெறும் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனைகளுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. இதனால், டிச. 31ம் தேதி இரவு 11:00 மணிக்கே, நள்ளிரவு சிறப்பு ஆராதனை மற்றும் வழிபாடுகள் நிறைவு பெற்றன.திருப்பூரில், குமரன் ரோடு புனித கத்ரீனாள் தேவாலயம், குமார் நகர் சி.எஸ்.ஐ., கோர்ட் வீதி டி.இ.எல்.சி., காங்கயம் ரோடு நல்லுார் சி.எஸ்.ஐ., தேவாலயம் ஆகியவற்றில், நேற்று காலை புத்தாண்டு சிறப்பு ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடந்தன.ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு அரசு துறை அலுவலகங்கள், பல்வேறு தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தன. இதனால், திருப்பூர் நகரில் வழக்கமாக காணப்படும் பரபரப்பு குறைந்திருந்தது. இருப்பினும் விடுமுறையை கழிக்கவும், புத்தாண்டை வரவேற்கவும் நண்பர்கள், உறவினர் வீடுகள் செல்வோர், கோவில்கள், தேவாலயங்களுக்கு சென்று வருவோர் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE