பொது செய்தி

தமிழ்நாடு

'நியூ இயர் போச்சே'; 'புள்ளிங்கோ' புலம்பல்! 'கேக்' வெட்டிய கமிஷனர்; 'படம்' காட்டிய போலீசார்

Added : ஜன 01, 2021
Share
Advertisement
திருப்பூர்:'சர்...புர்...' என, காதை கிழிக்கும் சத்தத்துடன் டூவீலரில் பறக்கும் 'புள்ளிங்கோஸ்', அதிரடி பட்டாசு, வாணவேடிக்கை, நடுரோட்டில் 'கேக்' வெட்டி, 'விஷ் யூ ேஹப்பி நியூ இயர்' என கூச்சல்... இப்படி எதுவும் இல்லாமல், திருப்பூரில், ஆங்கில புத்தாண்டு அமைதியாக பிறந்தது.ஆனால், அதே நேரம் கமிஷனர் 'கேக்' வெட்டி, பொதுமக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
 'நியூ இயர் போச்சே'; 'புள்ளிங்கோ' புலம்பல்! 'கேக்' வெட்டிய கமிஷனர்; 'படம்' காட்டிய போலீசார்

திருப்பூர்:'சர்...புர்...' என, காதை கிழிக்கும் சத்தத்துடன் டூவீலரில் பறக்கும் 'புள்ளிங்கோஸ்', அதிரடி பட்டாசு, வாணவேடிக்கை, நடுரோட்டில் 'கேக்' வெட்டி, 'விஷ் யூ ேஹப்பி நியூ இயர்' என கூச்சல்... இப்படி எதுவும் இல்லாமல், திருப்பூரில், ஆங்கில புத்தாண்டு அமைதியாக பிறந்தது.ஆனால், அதே நேரம் கமிஷனர் 'கேக்' வெட்டி, பொதுமக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். பாதுகாப்பையும் மீறி பைக்கில் 'பறந்த' புள்ளிங்கோ' பாய்ஸ்களை, போலீசார் உட்கார வைத்து, விழிப்புணர்வு படம் காட்டினர்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு போலீசார் தடை விதித்திருந்தனர். மொத்தம், 10 செக்-போஸ்ட்களிலும் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர்.இது தவிர முக்கிய ரோடு சந்திப்புகளில், 30 இடங்களில் போலீசார் பேரி கார்டு அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பகுதிவாரியாக, ஒன்பது ரோந்து வாகனங்களும், 23 டூவீலரிலும் போலீசார் நகரம் முழுவதும் விடிய விடிய ரோந்து சென்று கண்காணித்தனர்.அதில், நுாற்றுக்கும் மேற்பட்ட 'புள்ளிங்கோஸ்' அந்தந்த பகுதியில், இரண்டு மணி நேரத்துக்கும் மேல் உட்கார வைக்கப்பட்டனர்.
அவர்களுக்கு சாலை போக்குவரத்து விதிகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த படக்காட்சிகள் ஒளிபரப்பியும், அறிவுரையும் வழங்கினர்.புஷ்பா சந்திப்பு பகுதியில் நள்ளிரவு 12:00 மணிக்கு ரோந்து வந்த போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் கேக் வெட்டி, பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எந்தவித அசம்பாவிதமும் இன்றி, அமைதியாக புத்தாண்டு பிறந்தது. இதனால், போலீசார் நிம்மதியடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X