திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், ரேஷன் கடை வாரியாக, பொங்கல் பரிசு பெறும் பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், ஏழு லட்சத்து, 48 ஆயிரத்து, 357 ரேஷன் கார்டுகளுக்கு, பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது. இத்துடன், 309 இலங்கை தமிழர் குடும்பங்களுக்கும், பரிசு பொருள் வழங்கப்பட உள்ளது.வரும், 4ம் தேதி முதல், ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வினியோகம் நடக்கும். முன்னதாக, தாலுகா வாரியாகவும், ரேஷன் கடை வாரியாகவும், பரிசு பொருள் பெறும் பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் வடக்கில், ஒரு லட்சத்து, 29 ஆயிரத்து, 490 கார்டுகள்; திருப்பூர் தெற்கில், ஒரு லட்சத்து, 21 ஆயிரத்து, 495 கார்டுகள்; உடுமலையில், ஒரு லட்சத்து, 5,189 கார்டுகள்; தாராபுரத்தில், 96 ஆயிரத்து, 516; காங்கயத்தில், 75 ஆயிரத்து, 399.அவிநாசியில், 74 ஆயிரத்து, 799, பல்லடத்தில், 74 ஆயிரத்து, 291, மடத்துக்குளத்தில், 36 ஆயிரத்து, 357, ஊத்துக்குளியில், 34 ஆயிரத்து, 821 என, ஏழு லட்சத்து, 48 ஆயிரத்து, 357 கார்டுகளுக்கு, பொங்கல் பரிசு வழங்கப்படுவதாக, வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE