கடலுார்: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க வேண்டுமென அரசுப் பணியாளர் சங்க சிறப்புத் தலைவர் பாலசுப்ரமணியன் கூறினார்.கடலுாரில் நேற்று அவர், நிருபர்களிடம் கூறியதாவது:தமிழக அரசின் 'சி' மற்றும் 'டி' பிரிவு ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை பொங்கல் போனசாக வழங்க வேண்டும். நிரந்தர ஊதிய விகிதம் இல்லாத சத்துணவு உள்ளிட்ட அனைத்துத் துறை பணியாளர்களுக்கும் ஒரு மாத சம்பளம் அல்லது 3,000 ரூபாயில் எது அதிகமோ அதனை போனசாக வழங்க வேண்டும்.'ஏ' மற்றும் 'பி' ஊழியர்களுக்கு 3,000 ரூபாய் போனஸ் வழங்க வேண்டும்.டாஸ்மாக் பணியாளர்களின் ஓய்வூதியம் உட்பட பல்வேறு கோரிக்கை குறித்து அரசு கமிட்டி அமைத்தது. இக்குழுவின் அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இது தொடர்பாக சங்க நிர்வாகிகளை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தி சென்னை, திருச்சி, மதுரையில் வரும் 6ம் தேதி டாஸ்மாக் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்துகின்றனர்.அரசு பணியாளர் சங்கம் சார்பில் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 25 கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை விருந்தினர் மாளிகை முன் வரும் 21ம் தேதி காத்திருப்பு போராட்டம் நடக்கிறது.இவ்வாறு பாலசுப்ரமணியன் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE