கடலுார்: கடலுாரில் ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி, கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.திருவந்திபுரம் தேவநாத சாமி கோவிலில் அதிகாலை 5:00 மணி முதல் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத தேவநாத சாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் அதிகாலை 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதேபோன்று, திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள், புதுப்பாளையம் ராஜகோபால சாமி கோவில், மஞ்சக்குப்பம் ஆட்கொண்ட வரதராஜ பெருமாள் கோவில், திருப்பாதிரிப்புலியூர் வீரஆஞ்சநேயர், செம்மண்டலம் சாந்த ஆஞ்சநேயர், கூத்தப்பாக்கம் ராகவேந்திரர் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.நடுவீரப்பட்டுநடுவீரப்பட்டு கைலாசநாதர், சி.என்.பாளையம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன், மலையாண்டவர் கோவில்களில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு பூஜை நடந்தது.பெண்ணாடம்புத்தேரி ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று காலை 6:00 மணியளவில் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனமும் தொடர்ந்து, 7:00 மணிக்கு மகா தீபாராதனையும் நடந்தது.நெல்லிக்குப்பம்வரசித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் மூலவரும், உற்சவர் ஊஞ்சல் உற்சவத்திலும் அருள்பாலித்தனர்.இதே போன்று, வேணுகோபால சாமி கோவில், கைலாசநாதர், பூலோகநாதர், நடனபாதேஸ்வரர், அருள்தரும் அய்யப்பன், சிவலோகநாதர், எய்தனுார் ஆதிபுரீஸ்வரர், திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.மந்தாரக்குப்பம்குறிஞ்சிப்பாடி பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.சேத்தியாத்தோப்புஎறும்பூரில் கதம்பவனேஸ்வரருக்கு சிறப்பு அபிேஷகம் மகா தீபாராதனை நடந்தது. உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்து ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.விருத்தாசலம்விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உலக நன்மை வேண்டி புனிதநீர் கலசங்கள், 108 சங்குகள் வைத்து சிறப்பு வேள்வி செய்யப்பட்டது. தொடர்ந்து, சாமிக்கு 108 சங்காபிேஷகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.இதேபோல், மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர், சாமிக்கு 12 வகையான பொருட்களால் சிறப்பு அபிேஷகம், வெள்ளிக்கவசம் சாற்றி தீபாராதனை நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE