பொது செய்தி

தமிழ்நாடு

'ஆன்லைன் கல்வி, எட்டாக்கனி' :மாணவர், பெற்றோர் கலக்கம்

Updated : ஜன 02, 2021 | Added : ஜன 01, 2021
Share
Advertisement
திருப்பூர்:பொதுத்தேர்வு நடக்குமா, நடக்காதா என்ற கேள்விக்கு விடை கிடைக்காததால், பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.ஓரிரு நாட்களுக்கு முன் இந்த கல்வியாண்டு பூஜ்ய ஆண்டாக அறிவிக்கப்படலாம்' என கல்வி அமைச்சர் அறிவித்திருந்தார். ஆனால், சமீபத்திய பேட்டியில், 'தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் இருப்பதால், பொதுத்தேர்வு கட்டாயம்
 'ஆன்லைன் கல்வி, எட்டாக்கனி' :மாணவர், பெற்றோர் கலக்கம்

திருப்பூர்:பொதுத்தேர்வு நடக்குமா, நடக்காதா என்ற கேள்விக்கு விடை கிடைக்காததால், பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

ஓரிரு நாட்களுக்கு முன் இந்த கல்வியாண்டு பூஜ்ய ஆண்டாக அறிவிக்கப்படலாம்' என கல்வி அமைச்சர் அறிவித்திருந்தார். ஆனால், சமீபத்திய பேட்டியில், 'தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் இருப்பதால், பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும்; விரைவில் தேர்வுக்கால அட்டவணை வெளியிடப்படும்' என அறிவித்துள்ளார்.

இதுபோன்ற அறிவிப்புகள் பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இன்னமும் ஆன்லைன் கல்வி எட்டாக்கனியாகவே உள்ளது.

ஆன்லைன் வகுப்புகளை எத்தனை மாணவர்கள் பயன்படுத்தினார்கள் என்பது உறுதியாக சொல்ல முடியாது. குறைக்கப்பட்ட பாடங்கள் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகாத நிலையில், பொதுத்தேர்வினை மாணவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. முதல்வர் இதில் தலையிட்டு கல்வியாளர்கள் முதல் மாணவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கலந்தாலோசித்து சிறந்த முடிவை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X