தொழில் வரியை ரத்து செய்ய வர்த்தக நலச் சங்கத்தினர் மனு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொழில் வரியை ரத்து செய்ய வர்த்தக நலச் சங்கத்தினர் மனு

Added : ஜன 01, 2021
Share
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி மூலம் விதிக்கும் தொழில், சேவை வரி, உரிமைக் கட்டணங்களை ரத்து செய்யக்கோரி நகர வர்த்தக நலச் சங்கத்தினர் மனு அளித்தனர்.மாவட்ட துணைத் தலைவர் ரவி, நகர தலைவர் சிவானந்தம், செயலர் பன்னீர்செல்வம், பொருளாளர் தங்கராசுஆகியோர் பேரூராட்சி செயல் அலுவலர் மாதேஸ்வரனிடம் அளித்த மனு:ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் கொரோனா ஊரடங்கு காலத்தில் உள்ளூர்

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி மூலம் விதிக்கும் தொழில், சேவை வரி, உரிமைக் கட்டணங்களை ரத்து செய்யக்கோரி நகர வர்த்தக நலச் சங்கத்தினர் மனு அளித்தனர்.மாவட்ட துணைத் தலைவர் ரவி, நகர தலைவர் சிவானந்தம், செயலர் பன்னீர்செல்வம், பொருளாளர் தங்கராசுஆகியோர் பேரூராட்சி செயல் அலுவலர் மாதேஸ்வரனிடம் அளித்த மனு:ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் கொரோனா ஊரடங்கு காலத்தில் உள்ளூர் வியாபாரிகள் மூலம் நடமாடும் மளிகை, காய்கறி வண்டிகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் விற்கப்பட்டன. தற்போது கடைகள் திறக்கப்பட்டுள்ளன.வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் நடமாடும் காய்கறி, மளிகைக் கடைகள் இரவு 10:00 மணி வரை வியாபாரம் செய்வதால் ஸ்ரீமுஷ்ணம் பகுதி வியாபாரிகள் மிகவும் பாதித்துள்ளனர்.எனவே, வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வியாபார வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும். பேரூராட்சி மூலம் நடப்பு ஆண்டிற்கான தொழில்வரி, உரிமைக் கட்டணம், சேவை வரிகளை தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X