கடலுார்: கடலுாரில் சிவாஜி சமூக நலப்பேரவைஆலோசனைக் கூட்டம் நடந்தது.மாநிலச்செயலர் மரியந்துவான் தலைமை தாங்கினார். முன்னாள் மாநில சிவாஜி மன்ற துணைத் தலைவர் சுந்தரமூர்த்தி, மாவட்ட சிவாஜி மன்றத் தலைவர் ஜெயக்குமார், முன்னாள் ராமாபுரம் ஊராட்சித் தலைவர் தரணிதரன் பேசினர்.கூட்டத்தில்,நகரில் சேதமான சாலைகளை சீரமைக்க வேண்டும். கடலுாரில் சிவாஜிக்கு சிலை அமைக்க வேண்டும்என்பதுஉட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கவுரவத் தலைவராக பாவாடைசாமி, தலைவராக சிவாஜி கணேசன், பொதுச் செயலாளராக ரமேஷ், பொருளாளராக சீத்தாராமன், துணைத் தலைவர்களாக ராதா கிருஷ்ணன், வெங்கட்ராமன், பாஸ்கரன், அய்யாசாமி தேர்வு செய்யப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE