பொது செய்தி

தமிழ்நாடு

பன்னீர் கரும்பு விலை வீழ்ச்சி விவசாயிகள் கலக்கம்

Added : ஜன 01, 2021
Share
Advertisement
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு சுற்றுப் பகுதிகளில் விளைந்துள்ள பன்னீர் கரும்புகள் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.நடுவீரப்பட்டு அடுத்த பத்திரக்கோட்டை, சிலம்பிநாதன் பேட்டை, குமளங்குளம், வேகாக்கொல்லை, சத்திரம், சிவநந்திபுரம், மதனகோபாலபுரம், குள்ளஞ்சாவடி மற்றும் சிதம்பரம் சுற்றுப் பகுதிகளில் பன்னீர் கரும்புகள் அதிகளவு

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு சுற்றுப் பகுதிகளில் விளைந்துள்ள பன்னீர் கரும்புகள் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.நடுவீரப்பட்டு அடுத்த பத்திரக்கோட்டை, சிலம்பிநாதன் பேட்டை, குமளங்குளம், வேகாக்கொல்லை, சத்திரம், சிவநந்திபுரம், மதனகோபாலபுரம், குள்ளஞ்சாவடி மற்றும் சிதம்பரம் சுற்றுப் பகுதிகளில் பன்னீர் கரும்புகள் அதிகளவு பயிரிடப்படுகிறது.பொங்கல் பண்டிகையையொட்டி, கரும்புகளை குஜராத், ஆந்திரா, புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் வாங்கிச் செல்வது வழக்கம்.கடந்த இரண்டு ஆண்டுகளாக ரேஷன் கடை மூலம் அரசு பொங்கல் தொகுப்புடன் இரண்டு அடி கரும்பு வழங்கி வந்தது. இதனால் கரும்பு விவசாயிகள் தங்களது கரும்புகளை நல்ல விலைக்கு விற்று வந்தனர்.இந்த ஆண்டு அரசு, இரண்டு அடி கரும்புக்கு பதில் முழு கரும்பு வழங்கிட உத்தரவிட்டுள்ளது. இதனால் கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.ஆனால், கரும்புகளை வாங்க ஒரு சில அதிகாரிகளே வருகின்றனர். அவர்களும், வியாபாரிகள் கேட்பதை விட மிகவும் குறைந்த விலைக்கு கேட்கின்றனர்.கடந்த ஆண்டு 20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு 320 ரூபாய் வரை விற்ற நிலையில், தற்போது 240 ரூபாய்க்கு விற்பனையாவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.கடந்த மாதம் 'நிவர்' மற்றும் 'புரெவி' புயல்களால் கரும்புகள் உடைந்து சேதமடைந்த நிலையில், கரும்புக்கும் நல்ல விலை கிடைக்காததால் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X