தமிழ்நாடு

திணறல்: போக்குவரத்து நெரிசலால் கடலூர் நகரம்...நடைபாதைகள் முழுதும் ஆக்கிரமிப்பு

Added : ஜன 01, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கடலுார்: சாலையோர ஆக்கிரமிப்புகள், தாறுமாறான வாகன நிறுத்தம், போக்குவரத்து விதி மீறல் உள்ளிட்ட காரணங்களால், கடலுார் நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து, மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.மாவட்ட தலைநகரான கடலுாரில் மக்கள் தொகைக்கு இணையாக வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றம், அரசு மருத்துவமனை மற்றும்
 திணறல்:  போக்குவரத்து நெரிசலால் கடலூர் நகரம்...நடைபாதைகள் முழுதும் ஆக்கிரமிப்பு

கடலுார்: சாலையோர ஆக்கிரமிப்புகள், தாறுமாறான வாகன நிறுத்தம், போக்குவரத்து விதி மீறல் உள்ளிட்ட காரணங்களால், கடலுார் நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து, மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

மாவட்ட தலைநகரான கடலுாரில் மக்கள் தொகைக்கு இணையாக வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றம், அரசு மருத்துவமனை மற்றும் பல்வேறு அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள் இருப்பதால் மாவட்டம் முழுதும் இருந்து பணியாளர்கள், பொதுமக்கள் தினமும் அதிக அளவில் கடலுார் வருகின்றனர்.வாகன புழக்கம் அதிகளவில் இருப்பதால் அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் சாலை வசதி போதுமானதாக இல்லை.

இருக்கின்ற சாலைகளில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்பு, வாகனங்களை தாறுமாறாக நிறுத்துவது. போக்குவரத்து விதிமீறிச் செல்வது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடலுார் முக்கிய சாலைகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், விபத்துக்களும் நிகழ்கிறது.குறிப்பாக, மஞ்சக்குப்பம் நேதாஜி சாலையோரங்களில் வாகனம் நிறுத்துவதால் அடிக்கடி டிராபிக் ஜாம் ஆகிறது. இதைக் கருத்தில் கொண்டு, கடலுாரில் இருந்து புதுச்சேரி மார்க்கம் செல்ல ஆட்டோ, கார், பஸ், லாரி போன்ற வாகனங்களுக்கு தடை செய்யப்பட்டு, ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. ஆனால், அதை யாரும் மதிப்பதில்லை.திருப்பாதிரிப்புலியூர் லாரன்ஸ் ரோட்டில் சாலையோர கடைகள் அதிகரித்து, நடைபாதை முழுதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.இருக்கின்ற சாலையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் நடந்த செல்லவே முடியாத நிலை உள்ளது.

அப்படியே நடந்து செல்லும்போது அந்த வழியாக வரும் பஸ்கள் மற்றும் கார்களால் விபத்து அச்சம் உள்ளது.அதே போன்று கடலுார் முதுநகரில் முக்கிய சாலையில் இறைச்சிக்கடைகள், தள்ளுவண்டிக் கடைகள் அதிகரித்துள்ளன. சாலையோரங்களில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.இதனால் கடலுார் மார்க்கமிருந்து திருச்சி, சிதம்பரம், காரைக்கால், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் முதுநகரை கடப்பதற்கே அதிக நேரத்தை செலவிட வேண்டியுள்ளது.

போக்குவரத்து போலீசார் சாலையோரம் கயிறு கட்டி வாகனத்தை நிறுத்தச் செய்தாலும் அதனை யாரும் பின்பற்றுவதில்லை.எனவே, கடலுார் நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாக உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றியும், முக்கிய சாலைகளின் இரு புறமும் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதைத் தடுத்தால் மட்டுமே, போக்குவரத்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-ஜன-202107:41:01 IST Report Abuse
ஆப்பு பெரும்பாலான மக்கள் தெருவில் இருக்கிற மாதிரியே இருக்கு. சீக்கிரம் அவிங்களுக்கு வூடு கட்டிக்.கொடுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X