கடலுார்: கடலுார் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 1,782 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.கொரோனா பரவல் காரணமாக கடலுார் மாவட்டத்தில் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது. எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் மேற்பார்வையில் ஏ.டி.எஸ்.பி., பாண்டியன் தலைமையில் 1500 போலீசார் கடலுார், நெய்வேலி, விருத்தாசலம், பண்ருட்டி, திட்டக்குடி, சேத்தியாத்தோப்பு, சிதம்பரம் ஆகிய உட்கோட்ட காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.நிரந்தர சோதனைச் சாவடிகள் மட்டுமின்றி தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைத்தும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.இதில், போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 1,782 வழக்குகள் மற்றும் பொது இடங்களில் தகராறு செய்ததாக 285 வழக்குகள், சாராய வழக்குகள் 199, குட்கா பொருட்கள் விற்பனை வழக்குகள் 203, லாட்டரி வழக்குகள் 4, சூதாடிய வழக்குகள் 7, மது அருந்தி வாகனம் ஓட்டியது உட்பட 2,480 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE