சென்னை:இன்று முதல் ஜன.,5 வரை சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் சில இடங்களில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்.ஜன. 4 தமிழக தென் மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும்; 5ல் தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE