திருப்பூர்:பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களுக்கும், ஐ.எஸ்.ஓ., சான்று பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டம் தோறும், சிறப்பாக செயல்படும் மையங்களை தேர்வு செய்து, ஐ.எஸ்.ஓ., ஆய்வுக்குழு தொடர் ஆய்வு நடத்தி வருகிறது.திருப்பூர் மாவட்டத்தில், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, உடுமலையில், பழனியாண்டவர் நகராட்சி நடுநிலைப்பள்ளி, பல் லடம், காளிவேலம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளின், சத்துணவு மையங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.தனியார் ஆய்வு ஏெஜன்சி, தொடர் ஆய்வு நடத்தி வருகிறது. சத்துணவு சாப்பிடும் குழந்தைகள் எண்ணிக்கை, மையத்தின் சுகாதாரம், சமையல் முறைகள், காய்கறித்தோட்டம், பாதுகாப்பு மற்றும் கழிப்பிட வசதி என, அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து, தரச்சான்று பெற பரிந்துரை செய்கின்றனர்.இரண்டாவது முறையாக, ஆய்வுக்குழுவினர் நேற்று முன்தினம் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சிவசண்முகம் கூறுகையில், ''சத்துணவு மையங்களுக்கு, ஐ.எஸ்.ஓ., சான்று பெற முயற்சி எடுத்துள்ளோம். மாவட்டத்தில், மூன்று மையங்கள் பரிந்துரைக்கப்பட்டு, தொடர் ஆய்வு நடந்து வருகிறது.அனைத்து குறைகளையும் நிவர்த்தி செய்த பிறகு, ஐ.எஸ்.ஐ., சான்று வழங்க பரிந்துரைக்கப்படும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE