கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 2020ம் ஆண்டில் மொத்தம் 30 ஆயிரத்து 466 வழக்குகள் மற்றும் 3 லட்சத்து 16 ஆயிரத்து 538 மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 2020ம் ஆண்டு 173 திருட்டு வழக்குகள் பதிவு செய்து, 145 வழக்குகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதில், ஒரு கோடியே 55 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான திருட்டு வழக்கில், 88.59 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டுள்ளது. 59 இரு சக்கர வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.19 கொலை வழக்குகளில் அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டு 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 69 கொலை முயற்சி, 82 கலவரம், 469 அடிதடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,471 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பெண்களுக்கு எதிரான குற்றம் தொடர்பாக 105 வழக்குகள் பதிவாகியுள்ளது. குழந்தைகள் மீது பாலியல் துன்புறுத்தலில் 'போக்சோ' சட்டத்தின் கீழ் 48 வழக்குகள் பதிவு செய்து, 2 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.அதேபோல், 31 கஞ்சா, 14 கள்ளத் துப்பாக்கி, 148 சூதாட்டம், 82 லாட்டரி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 348 மணல் கடத்தல் வழக்குகளில் 327 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 330 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 2,060 சாராய கடத்தல் வழக்குகளில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 496 லிட்டர் கள்ளச்சாராயம், 2 லட்சத்து 24 ஆயிரத்து 340 லிட்டர் ஊறல்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதில், 98 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.கல்வராயன்மலைப் பகுதியில் 366 சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சாலை வீதிகளை மீறியதாக 3 லட்சத்து 16 ஆயிரத்து 538 மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்து 2.73 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.கொரோனா தடுப்பு காலத்தில் தடை உத்தரவை மீறியவர்கள் மீது 20 ஆயிரத்து 83 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.மாவட்டத்தில் உள்ள 212 ரவுடிகளில், 184 பேரிடம் ஒராண்டிற்கு நன்னடத்தை பிணையம் பெறப்பட்டுள்ளது. அதேபோல், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 26 பேரில் 17 பேரிடம் நன்னடத்தை பிணையம் பெறப்பட்டுள்ளது. 5 பேர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மோட்டார் வாகன வழக்குகளைத் தவிர்த்து மொத்தம் 30 ஆயியரத்து 466 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 18 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE