கள்ளக்குறிச்சி: கனியாமூர் பகுதியில் இந்தியன் வங்கியின் ஏ.டி.எம்., மைய திறப்பு விழா நேற்று நடந்தது.கள்ளக்குறிச்சி அடுத்த கனியாமூர் பகுதியில் ஏ.டி.எம்., மையம் அமைக்க வேண்டும் என்பது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. அதனை பூர்த்தி செய்யும் விதமாக இந்தியன் வங்கியின் ஏ.டி.எம்., மையம், ஏ.ஏ.எஸ்., வளாகத்தில் நேற்று திறக்கப்பட்டது.பால் உற்பத்தியாளர் சங்கத்தலைவர் விஜயன் தலைமையில் கனியாமூர் சக்தி கல்வி நிறுவன தலைவர் ரவிகுமார் ரிப்பன் வெட்டி நேற்று திறந்து வைத்தார். இந்தியன் வங்கி மாவட்ட முன்னோடி மேலாளர் முனீஸ்வரன், கள்ளக்குறிச்சி வங்கி முதன்மை மேலாளர் அனந்தராமன் சிறப்புரையாற்றினர்.சின்னசேலம் வங்கி கிளை முதன்மை மேலாளர் மனோபாலன் மற்றும் உதவி மேலாளர் ராஜா, வங்கி ஊழியர்கள், கனியாமூர் பால் சொசைட்டி தலைவர் சுரேஷ், பால் சொசைட்டி முன்னாள் தலைவர் சந்திரமோகன், ஏ.ஏ.எஸ்., வளாக உரிமையாளர் செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE