கள்ளக்குறிச்சி: பொங்கல் பண்டிகையையொட்டி வருவாய்துறை சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் விலையில்லா வேஷ்டி, சேலையினை, ரேஷன் ஊழியர்கள் வழங்க வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அதிருப்தியடைந்துள்ளனர்.பொங்கல் பண்டிகையினையொட்டி தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேஷ்டி, சேலை வழங்குவது வழக்கம். இப்பணிகள் வருவாய்துறை சார்பில் மேற்கொள்ளப்படும். தாசில்தார் அலுவலகத்தில் இருந்து வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கும், அங்கிருந்து வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கும் வேஷ்டி, சேலைகள் கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.கடந்த 2019ம் ஆண்டு வருவாய்துறையினர், ரேஷன் ஊழியர்களுடன் இணைந்து அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் போது வேஷ்டி, சேலையினையும் வழங்கினர். இப்பணியினை தற்போது ரேஷன் ஊழியர்கள் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது, வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் தயாராக உள்ள வேஷ்டி, சேலையினை ரேஷன் ஊழியர்கள் லோடு வாகனங்கள் மூலம் தங்களது ரேஷன் கடைகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். அத்தியாவசிய பொருட்களுடன் சேர்த்து, விலையில்லா வேஷ்டி, சேலையும் வழங்கிடலாம் என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே, பயோமெட்ரிக்கில் சர்வர் பிரச்னையால் பொருட்களை வழங்குவதில் தாமதம், முந்திரி, திராட்சையினை பேக்கிங் செய்தல், பணம் பட்டுவாடா உள்ளிட்ட காரணங்களால் பனிச்சுமை உள்ள நிலையில், இப்பணியும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதால் ரேஷன் ஊழியர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE