பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சியில் புத்தாண்டையொட்டி கோவில்கள் வழிபாடு

Added : ஜன 01, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி ;ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள கோவில்கள் மற்றும் சர்ச்களில் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடந்தது.கள்ளக்குறிச்சி கமலா நேரு தெருவில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில், சிவகாமி அம்மன் உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவில்,

கள்ளக்குறிச்சி ;ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள கோவில்கள் மற்றும் சர்ச்களில் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடந்தது.கள்ளக்குறிச்சி கமலா நேரு தெருவில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில், சிவகாமி அம்மன் உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவில், பத்ரகாளியம்மன் கோவில், விருகாவூர் சீனுவாச பெருமாள் கோவில், நீலமங்கலம் சீதாலஷ்மண அனுமன் சமேத கோதண்டராமர் கோவில் களில், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.கள்ளக்குறிச்சி செம்பொற்சோதிநாதர் கோவிலில் நேற்று காலை 5:00 மணியளவில் கோ பூஜையுடன் சிறப்பு வழிபாடு தொடங்கியது. மூலவர் செம்பொற்சோதிநாதருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, நவரத்தின கிரீடத்தில் அருள்பாலித்தார்.கள்ளக்குறிச்சி புனித ஜெபமாலை அன்னை ஆலயம், ஆற்காடு லுத்தரன் திருச்சபை பெதஸ்தே ஆலயங்களில் ஆங்கில புத்தாண்டையொட்டி நள்ளிரவு 12 மணியளவில் இருந்து சிறப்பு வழிபாடுகள் நடந்தது.சங்கராபுரம்சங்கராபுரம் கடைவீதியில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் விநாயகருக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட வாசனாதி திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தேவபாண்டலத்தில் துர்கையம்மன் கோவிலில் ரவி குருக்கள் தலைமையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.தியாகதுருகம்தியாகதுருகம் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவிலில் நேற்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.அதைத்தொடர்ந்து சர்வ அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார்.சந்தை மேட்டில் உள்ள நஞ்சுண்ட ஞானதேசிக சிவன் கோவிலில் சிறப்பு ஆராதனைகள் நடந்தது.புக்குளம் கைலாசநாதர், முடியனூர் ஆதி அருணாசலேஸ்வரர், வரஞ்சரம் பசுபதீஸ்வரர், குடியநல்லூர், ஈய்யனூர், கணங்கூர் சிவன் கோவில்களில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.சின்னசேலம்சின்னசேலம் நகரப்பகுதியிலுள்ள கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் மூலவருக்கு தங்க கவச அலங்காரம் செய்து, மகா தீபாராதனை செய்யப்பட்டது. இதில் ஆர்ய வைஸ்ய சமூக மக்கள் அனைவரும் கலந்து கொண்டு வழிபட்டனர். இதேபோல், பெருமாள் கோவிலில் உள்ள வரதராஜ பெருமாள் ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X