திருப்பூர்:ஆங்கில புத்தாண்டு பிறந்த திருப்பூர் அரசு மருத்துவமனையில், 15 குழந்தைகள் பிறந்தன.திருப்பூர், தாராபுரம் ரோட்டில், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை உள்ளது.இதில், சராசரியாக மாதம் 450 முதல், 500 எண்ணிக்கை வரையிலான பிரசவம் நடைபெறும். கடந்த பல மாதங்களாக கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் பிரசவம் உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைகள் அளிக்கத் தயக்கம் காட்டப்பட்ட நிலையில், அரசு மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணிகள் எண்ணிக்கை உயர்ந்தது.இச்சூழலில், திருப்பூர் அரசு மருத்துவமனையில் தற்போது, ஒரு மாதத்துக்கு, 600க்கும் மேற்பட்ட பிரசவம் நடக்கிறது.நேற்று ஜன., முதல் தேதி, புத்தாண்டு தினத்தில் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், 7 ஆண் மற்றும் 8 பெண் குழந்தை உட்பட மொத்தம், 15 குழந்தைகள் பிறந்தன.புத்தாண்டு தினத்தில் பிறந்த இளந்தளிர்களை, மருத்துவமனை செவிலியர்கள், பெற்றோர் கொஞ்சி மகிழ்ந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE