தமிழ்நாடு

வருங்காலம் வசந்தகாலம்! கோவை தொழில்துறையினருக்கு நம்பிக்கை தருகிறது புத்தாண்டு

Updated : ஜன 02, 2021 | Added : ஜன 01, 2021
Share
Advertisement
கோவை: பொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பி வரும் நிலையில், புத்தாண்டில் வளம் பெறுவதற்கான 'சமிக்ஞை' தெரிவதாக, தொழில் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.கொரோனாவால் கடந்தாண்டு தொழில் துறை கடுமையாக பாதிக்கப்பட்டது. பொருளாதாரமும் கடந்தாண்டு மார்ச் முதலே சரிவை சந்தித்தது. ஒருவழியாக இப்போதுதான் மெல்ல விடுபட்டு, அனைத்தும் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி
வருங்காலம் வசந்தகாலம்! கோவை தொழில்துறையினருக்கு நம்பிக்கை தருகிறது புத்தாண்டு

கோவை: பொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பி வரும் நிலையில், புத்தாண்டில் வளம் பெறுவதற்கான 'சமிக்ஞை' தெரிவதாக, தொழில் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.கொரோனாவால் கடந்தாண்டு தொழில் துறை கடுமையாக பாதிக்கப்பட்டது. பொருளாதாரமும் கடந்தாண்டு மார்ச் முதலே சரிவை சந்தித்தது. ஒருவழியாக இப்போதுதான் மெல்ல விடுபட்டு, அனைத்தும் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
இந்த புத்தாண்டு கொரோனா நீங்கியதாகவும், எல்லா விதத்திலும் நன்மை தரும் ஆண்டாகவும் அமையும் என்ற நம்பிக்கை, மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.பாதிப்புகள் விலகி தொழில் வளம்பெறும் என்ற புதிய நம்பிக்கையுடன், தொழில் துறையினர் உள்ளனர். கொரோனாவுக்கு முன்பு போல், ஜி.எஸ்.டி., வருமான வரி வசூல் உள்ளிட்ட பொருளாதார குறியீடுகள், பழைய நிலைக்கு திரும்புவதால், 2021ம் ஆண்டு தொழில் துறை பிரகாசமாக இருக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.நல்ல 'சமிக்ஞை'!இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளை தலைவர் பாலசுப்ரமணியன் கூறுகையில், ''மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளால், கொரோனா பாதிப்பில் இருந்து, ஓரளவு மீண்டு விட்டோம்.
கஷ்ட காலத்தை கடந்து, பொருளாதார குறியீடுகளான மின் நுகர்வு, ஜி.எஸ்.டி., வசூல், சரக்கு போக்குவரத்துக்கான 'இ - வே பில்', வரி உள்ளிட்டவற்றில் முன்பை போல், மிக அருகே நெருங்கி விட்டோம்.ஜன., பிப்., மார்ச் என நான்காம் காலாண்டில், பொருளாதாரம் நன்றாக இருக்கும் என சொல்லப்படுகிறது. பொருளாதார சரிவில் இருந்து மீண்டு வருவதற்கு, நல்ல அறிகுறியாக தெரிகிறது.
தொழில்துறை வளம் பெறும் என்ற நம்பிக்கையில் உள்ளோம்,'' என்றார்.முன்னேற்ற பாதை!'கொடிசியா' முன்னாள் தலைவர் ராமமூர்த்தி கூறுகையில், ''தொழில் தற்போது முன்னேற்ற பாதையில் உள்ளது. சிறு, குறு நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் பழையபடி வர ஆரம்பித்து விட்டதால், 2021ம் ஆண்டு நன்றாக இருக்கும். குறிப்பாக, இந்த காலாண்டு நன்றாக உள்ளது. மூலப்பொருட்களின் விலையேற்றத்தை மட்டும், அரசு கட்டுப்படுத்தினால் சிரமம் குறையும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X