சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாழ்க்கையில் விரக்தி பட்டதாரி தற்கொலை

Added : ஜன 01, 2021
Share
Advertisement
திண்டிவனம்: வாழ்க்கையில் விரக்தியடைந்த பொறியியல் பட்டதாரி துாக்குக் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.வானுார் அடுத்த டி.பரங்கிணி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் அருள்அரசன், 28; பொறியியல் பட்டதாரி. வேலை கிடைக்காததால், கிருஷ்ணகிரியில் நண்பர்களுடன் சேர்ந்து மாட்டுப் பண்ணை நடத்தி வந்தார். அதில், நஷ்டம் ஏற்பட்டது. மேலும், ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.2 லட்சத்திற்கு மேல்

திண்டிவனம்: வாழ்க்கையில் விரக்தியடைந்த பொறியியல் பட்டதாரி துாக்குக் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.வானுார் அடுத்த டி.பரங்கிணி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் அருள்அரசன், 28; பொறியியல் பட்டதாரி. வேலை கிடைக்காததால், கிருஷ்ணகிரியில் நண்பர்களுடன் சேர்ந்து மாட்டுப் பண்ணை நடத்தி வந்தார். அதில், நஷ்டம் ஏற்பட்டது. மேலும், ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.2 லட்சத்திற்கு மேல் இழந்தார். இந்நிலையில், இவருக்கு நிச்சயித்த பெண், வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.தொடர்ந்து வாழ்க்கையில் பின்னடைவு ஏற்பட்டதால், மன வருத்தத்தில் இருந்த அருள் அரசன் நேற்று முன்தினம் பிற்பகல் 2.15 மணிக்கு, திண்டிவனத்தில், சென்னை சாலையில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார்.நேற்று அதிகாலை 2.15 மணிக்கு, விடுதி ஊழியர்கள் அறைக்கு சென்று கதவை தட்டிய போது, அறை திறக்கவில்லை. மாற்று சாவி மூலம் கதவை திறந்து பார்த்த போது, அருள்அரசன் அறையில் தற்கொலைசெய்து கொண்டது தெரிந்தது.திண்டிவனம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அருள் அரசன் மொபைல் போனில், தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என வீடியோ பதிவிட்டிருந்தது தெரிய வந்தது.அவரது உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து அருள்அரசனின் தம்பி சுந்தர், 25; கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X