சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பார்வை இழந்த மனைவி காரணமான கணவன் கைது

Updated : ஜன 02, 2021 | Added : ஜன 01, 2021
Share
Advertisement
வடபழநி: மொபைல் போனால் தாக்கியதில், மனைவி கண்பார்வை இழந்த வழக்கில், கணவனை போலீசார் கைது செய்தனர்.விருகம்பாக்கம், தாங்கல் உள்வாயல் தெருவைச் சேர்ந்தவர் லோகேஸ்வரன், 30. இவரது மனைவி சித்ரா, 29. இருவரும், 2016ம் ஆண்டு, காதல் திருமணம் செய்து கொண்டனர். லோகேஸ்வரன், வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தியும், மது போதையில் தகராறு செய்து, மனைவியை அடித்து வந்தார். மேலும், இன்னொரு பெண்ணுடன்

வடபழநி: மொபைல் போனால் தாக்கியதில், மனைவி கண்பார்வை இழந்த வழக்கில், கணவனை போலீசார் கைது செய்தனர்.

விருகம்பாக்கம், தாங்கல் உள்வாயல் தெருவைச் சேர்ந்தவர் லோகேஸ்வரன், 30. இவரது மனைவி சித்ரா, 29. இருவரும், 2016ம் ஆண்டு, காதல் திருமணம் செய்து கொண்டனர். லோகேஸ்வரன், வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தியும், மது போதையில் தகராறு செய்து, மனைவியை அடித்து வந்தார். மேலும், இன்னொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

இதுகுறித்து, டிச., 25ம் தேதி, கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட தகராறில், கையில் இருந்த மொபைல் போனால், சித்ராவை தாக்கினார்.இதில், அவரது இடது கண்ணில் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சித்ரா பார்வை இழந்தார். லோகேஸ்வரனை, வடபழநி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X