பொது செய்தி

தமிழ்நாடு

புத்தாண்டு கொண்டாட்டம் வீடூர் அணையில் மக்கள் கூட்டம்

Added : ஜன 01, 2021
Share
Advertisement
விக்கிரவாண்டி: புத்தாண்டு தினத்தையொட்டி, வீடூர் அணையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.விக்கிரவாண்டி அருகே உள்ள வீடூர் அணை கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழையில் கடந்த 5ம் தேதி முழு கொள்ளவான 32 அடியை (605 மில்லியன் கன அடி) தொட்டது.தொடர்ந்து அணையிலிருந்து கடந்த 25 நாட்களில் இரு நாட்களை தவிர 23 நாட்கள் உபரிநீரை வெளியேற்றிய பொதுப்பணித்துறை

விக்கிரவாண்டி: புத்தாண்டு தினத்தையொட்டி, வீடூர் அணையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.விக்கிரவாண்டி அருகே உள்ள வீடூர் அணை கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழையில் கடந்த 5ம் தேதி முழு கொள்ளவான 32 அடியை (605 மில்லியன் கன அடி) தொட்டது.தொடர்ந்து அணையிலிருந்து கடந்த 25 நாட்களில் இரு நாட்களை தவிர 23 நாட்கள் உபரிநீரை வெளியேற்றிய பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையின் முழு கொள்ளவுநீரை பாதுகாத்து வருகின்றனர்.ஆங்கில புத்தாண்டை கொண்டாட தமிழக அரசு தடை விதித்ததால் முடங்கியிருந்த பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேற்று காலை மயிலம் முருகன் கோவிலில் தரிசனம் செய்தனர்.பின்னர் வீடூர் அணையின் அழகை ரசிக்க திரண்டனர். இதனால் வீடூர் அணை சுற்றுலா தலமாக மாறி எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காட்சியளித்தது.பொதுமக்கள் திரளாக கூடியதால், அணை பகுதியில் விக்கிரவாண்டி போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.மோழியனுார்சங்கராபரணி ஆற்றில் மயிலம் அடுத்த மோழியனுாரில் உள்ள தடுப்பணை நிரம்பி வழிவதை காண சுற்று வட்டார மக்கள் குவிந்து வருகின்றனர். நேற்று புத்தாண்டு என்பதால் மக்கள் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்தது. பலர் தடுப்பணை வழியும் பகுதியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.மயிலம் அடுத்த மோழியனூர் சங்கராபரணி ஆற்றின் குறுக்கில் உள்ள தடுப்பணையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஏராளமாானவர்கள் குளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X