செஞ்சி: அனந்தபுரம் அரசு மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு நடந்து வரும் ஆன்லைன் வகுப்பின் 100 வது நாளில் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு பராட்டு விழா நடந்தது.அனந்தபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் கணித ஆசிரியர் முருகன் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் ஆன்லைன் வகுப்பு நடத்தி வருகிறார். இதில் 171 மாணவர்கள் பங்கேற்று வருகின்றனர். இவர்களுக்கான பாராட்டு விழா 100வது நாள் வகுப்பில் ஆன்லைன் மூலம் நடந்தது.தலைமையாசிரியர் ஆனந்தன் தலைமை தாங்கினார். செஞ்சி கல்வி மாவட்ட அலுவலர் சுப்ராயன், ஆசிரியர் மற்றும் மாணவர்களை பாராட்டினார்.பள்ளி துணை ஆய்வாளர் விநாயகமூர்த்தி, திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமன், கரசனுார் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த ஆன்லைன் வகுப்பில் படித்து வரும் பெற்றோரை இழந்த 10 மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பரிந்துரை செய்து அகரம் அறக்கட்டளை மூலம் இலவசமாக ஸ்மார்ட் போன்களை பெற்று தந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE