பொது செய்தி

தமிழ்நாடு

கல்வராயன்மலையில் கிராம உதவியாளர் காலி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Added : ஜன 01, 2021
Share
Advertisement
கச்சிராயபாளையம்: கல்வராயன்மலையில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டம், கள்ளிப்பாறை, குரும்பலுார், வாரம், வெள்ளிமலை, வேங்கோடு ஆகிய கிராமங்களில் கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணிக்கு இன சுழற்சி முறையில் வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் நேர்காணல் மூலம் பணி நியமணம்

கச்சிராயபாளையம்: கல்வராயன்மலையில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டம், கள்ளிப்பாறை, குரும்பலுார், வாரம், வெள்ளிமலை, வேங்கோடு ஆகிய கிராமங்களில் கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணிக்கு இன சுழற்சி முறையில் வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் நேர்காணல் மூலம் பணி நியமணம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காக 02.01.21 முதல் 16.01.21 வரை காலை 10:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை அரசு விடுமுறை, சனி மற்றும் ஞாயிற்றுகிழமை நீங்கலாக கல்வராயன் மலை வட்டாட்சியர் அலுவலகத்தில் தகுதியான மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேரடியாக விண்ணபித்துகொள்ள கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.குறைந்த பட்ச கல்வி தகுதியாக 5 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத, படிக்கவும் , சைக்கிள்ஓட்டவும் தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு 31.12.2020 ல் 21 முதல் 35 வரை சாதி அடிப்படை பொறுத்து வயது வரம்பு இருக்கவேண்டும்.மனுதாரர்கள் சுய விலாசமிட்ட உரையுடன் பெயர் மற்றும் முகவரி, பிறந்த தேதி, வயது, சாதி சான்று நகல், வருமானச் சான்று நகல், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, முன்னுரிமைக்கான சான்று.பாஸ்போர்ட்சைஸ் புகைபடம் ஆகிய அனைத்து ஆவண நகல்கள் இணைத்து வரும் வரும் 16 ம் தேதி பிற்பகல் 2:00 மணிக்குள் கல்வராயன் மலை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துக்கொள்ள கேட்டுகொள்ளபடுகிறது. இவ்வாறு தாசில்தார்ராஜலட்சுமி அளித்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X