விக்கிரவாண்டி: தி.மு.க., கவர்ச்சி திட்டங்களை கூறி ஆட்சிக்கு வரமுடியாது என அமைச்சர் சண்முகம் பேசினார்.ஒருங்கிணைந்த விக்கிரவாண்டி ஒன்றியம் மற்றும் பேரூர் செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டத்திற்கு தலைமை தாங்கி மாவட்ட செயலாளர் அமைச்சர் சண்முகம் பேசியதாவது:கட்சி துவங்கிய 50 ஆண்டுகளில் 31 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த ஒரே இயக்கமாக அ.தி.மு.க., உள்ளது. தற்பொழுது நாம் முக்கியமான கால கட்டத்தில் உள்ளோம். இந்த தேர்தலில் நாம் வெற்றி பெற்றால் தான் அ.தி.மு.க., கட்டுக்கோப்பான இயக்கம் என்பதை நாம் வெளிப்படுத்த முடியும்.தேர்தல் சமயங்களில் தி.மு.க., கவர்ச்சியான, பொய்யான திட்டங்களை கூறி ஓட்டு கேட்டு வருவார்கள். ஆனால் மக்கள் எம்.பி., தேர்தலில் ஏமாந்தது போல ஏமாற மாட்டார்கள்.எனக்கு பிறகு 100 ஆண்டுகள் இந்த இயக்கம் இருக்கும் என்று ஜெ., கூறியது போல், இந்த இயக்கம் ௧௦௦ ஆண்டுகள் தொடர்ந்து சிறப்பாக இருக்கும்.இந்த தேர்தலில் அ.தி.மு.க., தொண்டர்கள் அனைவரும் எவ்வித கருத்து வேறுபாடின்றி ஒற்றுமையுடன் தேர்தல் களத்தில் மக்களை சந்தித்து ஓட்டுகளை பெறவேண்டும் . மீண்டும் தமிழகத்தில் மூன்றாவது முறையாக அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சியில் அமரப்போவது உறுதி. அதை யாராலும் தடுக்க முடியாது.இவ்வாறு அமைச்சர் சண்முகம் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE