பொது செய்தி

இந்தியா

தேசபக்தியே ஹிந்துக்களின் அடிப்படை குணம்: பாகவத்

Updated : ஜன 02, 2021 | Added : ஜன 01, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி: “தேசபக்தி என்பது, ஹிந்துக்களின் அடிப்படை குணம். எனவே, இந்திய நாட்டிற்கு எதிரானவர்களாக ஹிந்துக்கள் ஒருபோதும் இருக்க மாட்டார்கள்,” என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், கூறினார்.டில்லியில், ஆர்.எஸ்.எஸ்., எனப்படும், ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவாக் சங்க தலைவர் மோகன் பாகவத், ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: தர்மமும், தேசபக்தியும்
தேசபக்தி, ஹிந்து, குணம், மோகன் பாகவத், பாகவத், ஆர்எஸ்எஸ், ஆர்.எஸ்.எஸ்.,

புதுடில்லி: “தேசபக்தி என்பது, ஹிந்துக்களின் அடிப்படை குணம். எனவே, இந்திய நாட்டிற்கு எதிரானவர்களாக ஹிந்துக்கள் ஒருபோதும் இருக்க மாட்டார்கள்,” என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், கூறினார்.

டில்லியில், ஆர்.எஸ்.எஸ்., எனப்படும், ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவாக் சங்க தலைவர் மோகன் பாகவத், ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: தர்மமும், தேசபக்தியும் வெவ்வேறு விஷயங்கள் அல்ல என, மகாத்மா காந்தி கூறி உள்ளார். தாய்நாடு மீதான அன்பு, ஆன்மிகத்தில் இருந்து உருவாகிறது என்றும் அவர் கூறி உள்ளார்.


latest tamil news


ஹிந்து மதத்தை சேர்ந்தோர், தேசபக்தியுடன் இருப்பர்; அது, ஹிந்து மக்களின் அடிப்படை குணமாகும். எனவே, இந்திய நாட்டிற்கு எதிரானவர்களாக ஹிந்துக்கள் ஒருபோதும் இருக்க மாட்டார்கள். எனினும், மற்றொன்றையும் நாம் அறிந்து கொள்ளவேண்டும். நாட்டை விரும்புவோர் என்றால், நிலத்தின் மீது மட்டும் அவர்கள் அன்பு வைத்திருக்க மாட்டார்கள். நாட்டு மக்கள், நதிகள், கலாச்சாரம், பாரம்பரியம் உள்ளிட்ட அனைத்தின்மீதும், அவர்கள் அன்பாக இருப்பர். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
02-ஜன-202117:04:54 IST Report Abuse
Malick Raja இது அப்பப்ப வந்து எதையாவது செய்யும் . அவ்வளவுதான்
Rate this:
Cancel
Raj - Namakkal,சவுதி அரேபியா
02-ஜன-202116:33:24 IST Report Abuse
Raj சுதந்திர போராட்டத்தின் போது தேச துரோகமாக செயல்பட்ட சங்கிகள் பற்றி எவ்வளவு ஆதாரம் வேண்டும் உனக்கு .... நீயெல்லாம் தேச பக்தி பற்றி பேசவே கூடாது
Rate this:
CECIL KALLADAI - chennai,இந்தியா
02-ஜன-202117:52:39 IST Report Abuse
CECIL KALLADAIஆதாரத்த காட்டு...
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
02-ஜன-202115:29:44 IST Report Abuse
S.Baliah Seer அரசியல்வாதிகளின் பதவி வெறி,அதற்காக சொந்த மக்களை ஏமாற்றுவது,ஊழல்,பொய் பித்தலாட்டம் ,இவற்றை முதலில் ஒழியுங்கள்.நாட்டுப்பற்று ஒவ்வொரு இந்தியக் குடிமகனிடம் இருந்தும் நூற்றுக்கு நூறு வெளிப்படும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X