பாகூர்: மணப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் சந்திப்பு கூட்டம் நடந்தது.கூட்டத்தில் ஆசிரியர் சசிக்குமார் வரவேற்றார்.
தலைமையாசிரியர் பழனிசாமி தலைமை தாங்கினார். பள்ளி திறக்கும் போது, மாணவர்களை எவ்வாறு தயார் செய்து பாதுகாப்பாக பள்ளிக்கு அனுப்புவது குறித்தும், சீருடை வழங்குதல் குறித்தும் ஆலோசனை செய்தனர்.இன்ஸ்பயர் மேனக் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள் சந்தியா, உதயஸ்ரீ ஆகியோருக்கு பரிசளித்தனர். வழிகாட்டி ஆசிரியர் ஜெய்சுந்தர் பாராட்டி பேசினார்.உலக மண் தினத்தை முன்னிட்டு அரபிந்தோ கல்வி அறக்கட்டளை சார்பில் நடந்த ஆய்வறிக்கை போட்டியில், ஆசிரியர்கள் ஜெய்சுந்தர்,சசிக்குமார் வழிகாட்டுதலின் படி பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்திய, கார்த்திகா, நந்தினி, அர்ச்சனா, காயத்திரி, கிருஷ்யா ஜெனிபர், தனலட்சுமி, சந்தியா, ஜீவிதா ஆகியோரை தலைமையாசிரியர் பழனிசாமிபாராட்டினார்.ஏற்பாடுகளை, ஆசிரியர்கள் பாவாடை சாமி, சதீஷ் செய்திருந்தனர். ஆசிரியர் ராஜ ஜித்தேந்திரி நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE