கோவை:கொரோனா காலத்தில் பணிபுரிந்த துாய்மை பணியாளர்களுக்கு, தமிழக அரசு அறிவித்தபடி, ஒரு மாத சிறப்பூதியம் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.கோயமுத்துார் மாநகராட்சி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில், தலைவர் கிருஷ்ணன், செயலாளர் பிரகாஷ், இளைஞரணி செயலாளர் கிருஷ்ணன், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய கோவை மாவட்ட தலைவர் தேசிங்குராஜன் ஆகியோர், அமைச்சர் வேலுமணியை சந்தித்து, மனு கொடுத்தனர்.அதில் கூறியிருப்பதாவது:கோவை மாநகராட்சியின் கீழ் இயங்கும், கல்வி பிரிவில் இளநிலை உதவியாளர்கள், உதவியாளர்கள், கண்காணிப்பாளர் பணியிடங்கள், இதுநாள் வரை நிரப்பப்படாமல் உள்ளன.இதுதொடர்பாக, அரசு தரப்பில் விளக்கம் கேட்டு, மாநகராட்சியில் இருந்த, பள்ளி கல்வித்துறைக்கு பதில் அனுப்பவில்லை. உடனடியாக, அனுப்பி, அப்பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, 2016, ஜனவரியில் அமல்படுத்திய, ஏழாவது ஊதிய குழுவின், 21 மாத ஊதிய நிலுவை வழங்க வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய நியமிக்கப்பட்ட, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சித்திக் அறிக்கையை வெளியிட்டு, அனைத்து அலுவலர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். மாநகராட்சியில் உள்ள, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். கொரோனா பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்த, மாநகராட்சி முன்கள பணியாளர்களின் குடும்பத்திற்கு, நிவாரண தொகை ரூ.50 லட்சம் வழங்க வேண்டும். தொற்று பரவிய காலத்தில் பணிபுரிந்த துாய்மை பணியாளர்களுக்கு, தமிழக அரசு அறிவித்தபடி, ஒரு மாத சிறப்பூதியம் வழங்க வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE