'மரமே மடத்துக்குளத்திலிருந்த நீ எப்படி இந்த அமராவதி காட்டுப்பகுதிக்குள்ள வந்த...!புறாவே நீ இங்க தான் இருக்கியா? சொல்றேன் கேளு.
மடத்துக்குளம் நால்ரோடு பக்கத்துல பிரமாண்டமா வளர்ந்தேன். நீங்க எல்லாம் என்மேல கூடுகட்டி வாழ்ந்தீங்க... அப்போ அந்த இடமே ரொம்ப அழகா இருந்துச்சு... நான் நின்ற இடத்தில் கட்டடம் கட்டுறதுக்காக, ஒரு நாள் திடீரென என்னை வெட்டி சாய்ச்சாங்க... அப்போ நீங்க எல்லாம் கூடுகளை இழந்து தவிச்சீங்க...எல்லாருக்கும் நல்லது செஞ்ச என்ன துண்டு துண்டா வெட்டினாங்க... மறுநடவு கூட செய்யாம, இடஞ்சலா இருக்கறதா சொல்லி இங்க காட்டுக்குள்ள வீசிட்டாங்க.
புறாவே நீ எப்படி இங்க வந்த!மரமே, அன்னைக்கு உன்ன வெட்டினப்போ, கூடுகள் எல்லாம் தரையில் விழுந்து நொறுங்கி போச்சு. நான் ரெண்டு முட்டை வச்சிருந்தேன். சில நாள்ல வெளிவர இருந்த என் குஞ்சுகள் என் கண்ணு முன்னாடி சிதைஞ்சு போச்சு...மைனாவோட குஞ்சுகளும் இறந்து போச்சு. அழுதபடியே இங்கே வந்தோம். புறாவே உங்க நிலைக்கு வருத்தப்படுறேன். கிளியே உன் நிலை என்ன?
மரமே நானும் பாதிக்கப்பட்டேன். என் கூடு பாறைல விழுந்ததால உடம்பில அடிபட்டிருச்சு. அந்த இடத்திலிருந்து இந்த காட்டுக்குள்ள வருவதற்கு ரொம்ப கஷ்டப்பட்டேன். மரமே பாத்தியா! காக்கையான நான் ஜாலியாக இருந்தேன். என் கூடு கம்பத்தில மோதினதால காலில் அடிபட்டு என்னால சரியா நடக்க முடியல...
மனுசங்ககிட்ட மனிதாபிமானம் குறைஞ்சு போச்சு.ஒரு மரத்தை வெட்டும் போது நுாற்றுக்கணக்கான பறவைகளின் வாழ்வாதாரம் அழிக்கப்படுதுன்னு அவங்க நினைக்கிறதே இல்ல. நீங்க என் மேல் மீண்டும் கூடுகட்டுங்க... 'பறவைங்க கூடு தான் மரங்களுக்கு கிரீடம்'. நா உங்களுக்கு நிறைய பழங்கள தாரேன்.
கொத்தி ருசிங்க. நீங்க பறக்கிற திசையெல்லாம் போயி பழத்தின் விதைய உங்க எச்சத்துடன் பூமில விதைங்க.அங்கெல்லாம் பசுமையான மரங்க வளந்து நல்ல காற்றையும் ஆரோக்கியமான சூழ்நிலையும் கொடுக்கட்டும். நான் இங்கே எனது பசுமையால் மேகங்களை அரவணைக்கும் போது சில்லுனு மழை பெய்யும்.
அந்த மழைநீர் பல சிற்றோடைகளா மாறி அங்க தொலைவா தெரியுதே அமராவதி அணைல தேங்கி, உடுமலை, மடத்துக்குளம் தாலுகா தொடங்கி கரூர் வரை விவசாயத்துக்கு பயன்பட்டு பசுமை செழிக்கட்டும்.மரமே என்ன மறந்துட்டீயே...அட குரங்காரே உன்னை மறக்க முடியுமா... இப்ப நீ நகரத்துக்கு போறதில்லையா. ஆமாம் மரமே.
அரைமணி நேரம் வித்தை காட்டினா தா... ஏதாவது ஸ்நாக்ஸ் தர்றாங்க. அதுசரி உங்களை அப்புறப்படுத்தியவங்களுக்கு நீங்க மீண்டும் நல்லது செய்யறீங்களே ஏன்... குரங்காரே எங்க வாழ்க்கையே பிறரின் நன்மைக்காகத்தான். இதை மனிதர்கள் உணர்ந்தால் தான்... பூமி செழிப்படையும்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE