பொது செய்தி

தமிழ்நாடு

தேவார ராகம்... ஆன்மிக இசை பயணத்தில் மாணவி சாதனை

Added : ஜன 02, 2021
Share
Advertisement
நாயன்மார்களின் கதைகளில் துவங்கி, உலக நன்மைக்காக தேவார பாடல்கள் பாடி, இந்தியன் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்உடுமலை மாணவி உமாநந்தினி.கொரோனா காலகட்டத்தில், வீட்டிலுள்ள குழந்தைகளை கையாள முடியாமல், பெற்றோர் பலரும், திண்டாடி வருகின்றனர். இந்த காலகட்டம், பல பெற்றோருக்கும் தங்கள் குழந்தைகளின் தனித்திறன்களை கண்டறிய உதவியுள்ளது.உடுமலை சுற்றுப்பகுதி
 தேவார ராகம்...  ஆன்மிக இசை பயணத்தில் மாணவி சாதனை

நாயன்மார்களின் கதைகளில் துவங்கி, உலக நன்மைக்காக தேவார பாடல்கள் பாடி, இந்தியன் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்உடுமலை மாணவி உமாநந்தினி.கொரோனா காலகட்டத்தில், வீட்டிலுள்ள குழந்தைகளை கையாள முடியாமல், பெற்றோர் பலரும், திண்டாடி வருகின்றனர். இந்த காலகட்டம், பல பெற்றோருக்கும் தங்கள் குழந்தைகளின் தனித்திறன்களை கண்டறிய உதவியுள்ளது.உடுமலை சுற்றுப்பகுதி மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாய், உலக நன்மைக்கான ஒரு முயற்சியாக துவங்கி, இன்று, தேசிய அளவிலான 'இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' என்ற கின்னஸ் அமைப்பின் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார், மாணவி உமா நந்தினி.கொரோனா ஊரடங்கு துவங்கிய போது, பொதுமக்கள், விதிமுறைகளை பின்பற்றியும், பாதுகாப்புடனும் இருப்பதற்கு, பல பாடல்களை பாடி, இணையதளத்தில் ஒளிபரப்பி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். உடுமலை கல்வி மாவட்டத்தில், தனியார் பள்ளியில் படிக்கும் மாணவியின் பெற்றோர், பாலகிருஷ்ணன் மற்றும் கண்ணம்மாள் ஆசிரியர்களாக உள்ளனர்.சிறுவயது முதல், கர்நாடக இசையின் மீதுள்ள ஆர்வத்தால், மாணவி தொடர்ந்து பயிற்சி எடுத்து வருகிறார். திருவாவடுதுறை ஆதீன தேவார பயிற்சி மையம் நடத்தும் பாடசாலையில், ஆறு ஆண்டுகளாக தேவாரம் பயின்று வருகிறார்.கொரோனா விடுமுறையில் தேவார பாடல்களை, தேவார பாடசாலை அமைப்பாளர் ராணி, ஆதீன பேராசிரியர் ஜெய்சிங் லிங்கவாசகம் உள்ளிட்டோரின் வழிகாட்டுதலில், நாள்தோறும், நான்கு தேவார பதிகங்களை பாடி, விளக்கமளித்து, சமூக வளைதளக்குழுக்களில் பதிவிடுவதை தொடர்ந்து செய்தார்.நாள்தோறும், உலக நன்மைக்கான முயற்சியாக, தேவார பாடல்கள் பாட விருப்பமுள்ளவர்களை, தொலைபேசியில் இணைத்துக்கொண்டு, நான்கு பதிகங்கள் படிப்பதை வழக்கமாக்கி கொண்டுள்ளார்.இந்த முயற்சி தொடர்ந்து, நடந்ததில், மாணவி, 8,239 பாடல்களை, 239 நாட்களாக பாடி தனி சிறப்பை பெற்றுள்ளார்.மாணவியின் இந்த முயற்சிக்கான அங்கீகாரமாக, இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்பின் கின்னஸ் சாதனை புத்தகத்தில், பெயர் பெற்று சாதனை நிகழ்த்தி, பெற்றோருக்கும், பயிற்சி ஆசிரியர்களையும் பெருமைப்படுத்தியுள்ளார்.மாணவி கூறுகையில், ''இசையின் மீதிருந்த ஆர்வமும், விருப்பமும், ஆன்மிகத்தின் வழியாக, இன்று சாதனைக்கு காரணமாகியுள்ளது. இசை, மற்றும் பாடசாலை ஆசிரியர்களின் வழிகாட்டுதலிலும், பெற்றோரின் ஊக்கத்தினாலும் இந்த முயற்சியை துவங்கினேன். தேவாரம் படிப்பதில், இருந்த ஆர்வம் இனியும், தொடரும். பொது நலனை கருத்தில் கொண்டு, இறை அருளை அனைவரும் பெற, எடுக்கப்பட்ட இந்த முயற்சியை தொடர்ந்து, எடுத்துச்செல்வதுதான் எனது விருப்பம்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X