பொது செய்தி

தமிழ்நாடு

வருது... வருது... சுவாமி மாடு: பொங்கலுக்கு தயாராகும் கிராமம்

Added : ஜன 02, 2021
Share
Advertisement
வீட்டில் வளர்க்கும் மாடுகளை சுவாமியாக வழிபடுவது, ஹிந்து கலாசாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதே பசு மாடு, பொங்கல் பண்டிகையன்று கன்று ஈன்றால், சுவாமிக்கு நேர்ந்து விடும் கலாசாரம், இன்றும் கிராமங்களில் கடைபிடிக்கப்படுகிறது.சுவாமிக்கு நேர்ந்து விடும் நிகழ்வில், உறவுகள் வீட்டுக்கு சென்று, விருந்துண்டு, ஊர் கூடி மகிழ்வதால், கிராம ஒற்றுமை, குடும்ப ஒற்றுமை
 வருது... வருது... சுவாமி மாடு: பொங்கலுக்கு தயாராகும் கிராமம்

வீட்டில் வளர்க்கும் மாடுகளை சுவாமியாக வழிபடுவது, ஹிந்து கலாசாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதே பசு மாடு, பொங்கல் பண்டிகையன்று கன்று ஈன்றால், சுவாமிக்கு நேர்ந்து விடும் கலாசாரம், இன்றும் கிராமங்களில் கடைபிடிக்கப்படுகிறது.சுவாமிக்கு நேர்ந்து விடும் நிகழ்வில், உறவுகள் வீட்டுக்கு சென்று, விருந்துண்டு, ஊர் கூடி மகிழ்வதால், கிராம ஒற்றுமை, குடும்ப ஒற்றுமை மேலோங்குகிறது. கிணத்துக்கடவு அருகேயுள்ள கிராம மக்கள் இன்றளவுக்கும் இக்கலாசாரத்தை கடைபிடிக்கின்றனர். கிணத்துக்கடவு, தேவராடிபாளையம் கிராமத்தில், பொங்கல் விழாவின் காப்பு கட்டும் நாளில் இருந்து, பூ பொங்கல் வரையுள்ள நான்கு நாட்களில் வீடுகளில் உள்ள பசு மாடு கன்று ஈன்றால், அந்த கன்று குட்டியை மால கோவிலுக்கு நேர்ந்து விடுவது வழக்கம்.மாட்டின் உரிமையாளரின் உடன் பிறந்த சகோதரி வீட்டுக்கு காப்பு கட்டு முடிந்து முதல் நாள், தை பொங்கல் அன்று மாட்டுடன் சென்று, தாரைதப்பட்டை வாத்தியத்துடன் சகோதரிக்கும், அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கு புத்தாடை வாங்கி கொடுத்தும், மாட்டின் இரண்டு காதுகளில் மூன்று கீறல் இடப்பட்டு, சுவாமி மாடாக அறிவிப்பது தொன்றுதொட்டு கடைபிடிக்கப்படுகிறது.உறவினர்களுக்கு விருந்து படைப்பதுடன், கிராமத்தில் உள்ள மைதானத்தில் சுவாமி மாடுகளை வரிசையாக நிறுத்தி, கழுத்தில் மணி கட்டப்பட்டு, வீடு வீடாக அழைத்து வரப்படும் நிகழ்ச்சி நடக்கும்.சலங்கை மாட்டின் வரவுக்காக காத்திருக்கும் பொதுமக்கள், சலங்கை மாடு வந்ததும், வீட்டுக்கு முன் நிறுத்தி மஞ்சள் நீர் ஊற்றி, தேங்காய், பழம் வைத்து வழிபடுவார்கள். வீட்டுக்குள் சலங்கை மாட்டை அழைத்து சென்றால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும் என்ற ஐதீகமும் உள்ளது.சலங்கை மாட்டுடன் வருபவர்கள் மீதும், உறவினர்கள் மீதும் மஞ்சள் நீர் ஊற்றி அன்பையும், மகிழ்ச்சியையும் வெளிபடுத்தி பூப்பொங்கல் வாழ்த்து கூறி விளையாடுவார்கள்.மதிய நேரத்தில், சலங்கை மாடுகளை அழைத்துக் கொண்டு, அருகில் உள்ள கோதவாடி ஆல்கொண்ட திருமால் கோவிலுக்கு அழைத்து சென்று, மாலையில் மீண்டும் மாட்டுடன் விளையாடுவது வழக்கம்.பொங்கல் பண்டிகை நெருங்குவதால், தேவராடிபாளையம் கிராமமே திருவிழாக்கோலம் பூண்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X