பொது செய்தி

தமிழ்நாடு

எப்ப பாலம் கட்டுவாங்க! காத்திருக்கும் மணக்கடவு மக்கள்;பணிகளை துவங்க எதிர்பார்ப்பு

Added : ஜன 02, 2021
Share
Advertisement
ஆனைமலை:பொள்ளாச்சி அடுத்துள்ள, மணக்கடவு கிராமத்துக்கு, தப்பட்டைக்கிழவன்புதுாரில் இருந்து உயர்மட்ட பாலம் கட்டுவதற்காக, மண் பரிசோதனை செய்யும் பணி துவங்கியுள்ளது. இதற்கு முன், இதே போன்று பலமுறை மண் பரிசோதனை மேற்கொண்டு பாலம் கட்டாததால், இந்த முறையாவது கட்டுமான பணிகள் துவங்க வேண்டுமென மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.பொள்ளாச்சி அடுத்துள்ள, மணக்கடவு கிராமம், தமிழக -
 எப்ப பாலம் கட்டுவாங்க! காத்திருக்கும் மணக்கடவு மக்கள்;பணிகளை துவங்க எதிர்பார்ப்பு

ஆனைமலை:பொள்ளாச்சி அடுத்துள்ள, மணக்கடவு கிராமத்துக்கு, தப்பட்டைக்கிழவன்புதுாரில் இருந்து உயர்மட்ட பாலம் கட்டுவதற்காக, மண் பரிசோதனை செய்யும் பணி துவங்கியுள்ளது. இதற்கு முன், இதே போன்று பலமுறை மண் பரிசோதனை மேற்கொண்டு பாலம் கட்டாததால், இந்த முறையாவது கட்டுமான பணிகள் துவங்க வேண்டுமென மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.பொள்ளாச்சி அடுத்துள்ள, மணக்கடவு கிராமம், தமிழக - கேரள மாநில எல்லைப்பகுதியாக உள்ளது. இங்கு, 300 வீடுகளில், 1,200க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.ஆழியாறு ஆற்றுநீர் சூழ்ந்து தீவு போல இருக்கும் மணக்கடவு கிராமத்துக்கு, திவான்சாபுதுார் ரயில்வே கேட் பகுதியில் இருந்து மட்டுமே செல்ல முடியும். கிராமத்துக்கு, பொள்ளாச்சியில் இருந்து மீனாட்சிபுரம் வழியாக, காலை, மாலையில், தலா, ஒரு அரசு பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த பஸ்களை பயன்படுத்தி மட்டுமே, ஆனைமலை, பொள்ளாச்சி பகுதிக்கு மக்கள், மாணவர்கள், விவசாயிகள் சென்று வருகின்றனர்.பொள்ளாச்சியில் இருந்து மீனாட்சிபுரத்துக்கும், அங்கிருந்து ஐந்து கி.மீ., தொலைவுள்ள மணக்கடவுக்கும், தனித்தனியாக 'டிக்கெட்' எடுத்து சிரமப்படுகின்றனர். பஸ் இல்லாதபோது, மீனாட்சிபுரத்துக்கு மக்கள் நடந்தே செல்வதுடன், அதிக வாடகை செலுத்தி ஆட்டோவிலும் செல்கின்றனர்.பிரச்னைக்கு தீர்வு காண, மணக்கடவு - தப்பட்டைக்கிழவன்புதுார் பகுதிக்கு, ஆழியாறு ஆற்றைக்கடந்து செல்ல பாலம் கட்ட வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்தனர். மக்களின் கோரிக்கைகள் குறித்தும், பாலத்தின் தேவை குறித்தும், 'தினமலர்' நாளிதழில் பலமுறை படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.இதையடுத்து, 2006ல் மணக்கடவில் உள்ள வேளாண் கல்லுாரியின் இடத்துக்கு அருகே, ஆழியாறு ஆற்றுப்படுகையில் பாலம் கட்டுவதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு, பாறையின் கடினத்தன்மை குறித்து, நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு செய்தனர்.அதன்பின், பணியை கைவிட்டனர்; ஆவணங்கள் கிடப்பில் போடப்பட்டன. ஆவணங்கள் 'துாசு' தட்டப்பட்டு, மீண்டும், 2016 மற்றும், 2019ல் ஆய்வு நடந்தது. தற்போது, இடம் தேர்வு செய்யப்பட்டு நேற்றுமுன்தினம் முதல், பாறையின் கடினத்தன்மை, மண் பரிசோதனை செய்யும் பணி துவங்கப்பட்டுள்ளது.இந்த முறையாவது, ஆய்வு செய்வதோடு நிறுத்தாமல், பாலம் கட்டும் பணியை துவங்க வேண்டுமென்பதே அனைவரின் கோரிக்கையாகும்.ரூ. 6.5 கோடி திட்டமதிப்பீடு!நெடுஞ்சாலைத்துறை நபார்டு திட்ட உதவிக்கோட்ட பொறியாளர் பிரமிளா கூறியதாவது:மணக்கடவு - தப்பட்டைக்கிழவன்புதுார் செல்ல, உயர்மட்ட பாலம், 130 மீ., நீளத்துக்கு, 7.5 மீட்டர் அகலத்துக்கு, பாலத்துக்கு மேல் ஆற்று நீர் வழிந்தோடாத அளவு உயரத்துக்கு, 6.5 கோடி ரூபாயில் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.இதற்கான திட்ட வரைவு தயார் செய்து அரசுக்கு அனுப்பி உள்ளோம். தற்போது, விரிவான அறிக்கை அனுப்புவதற்காக, பாறையின் கடினத்தன்மை, மண் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அந்த இடத்தில் பாலம் கட்ட அரசு அனுமதி அளித்ததும், கட்டுமான பணி துவங்கப்படும்.இவ்வாறு, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X