பொது செய்தி

தமிழ்நாடு

சொட்டு நீர் பாசன முறையால் வெங்காய விவசாயிகள் மகிழ்ச்சி

Added : ஜன 02, 2021
Share
Advertisement
உடுமலை:சொட்டு நீர் பாசன முறையால், சின்னவெங்காய சாகுபடியில், பல்வேறு பாதிப்புகள் தவிர்க்கப்படுவதாக, உடுமலை பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.உடுமலை கணக்கம்பாளையம், குட்டியகவுண்டனுார், போடிபட்டி, பள்ளபாளையம் உட்பட பகுதிகளில், கிணற்றுப்பாசனத்துக்கு, சின்னவெங்காயம் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. முன்பு, நேரடி பாசன முறையில், இச்சாகுபடியில், நீர் பாய்ச்சி வந்தனர்.
 சொட்டு நீர் பாசன முறையால் வெங்காய விவசாயிகள் மகிழ்ச்சி

உடுமலை:சொட்டு நீர் பாசன முறையால், சின்னவெங்காய சாகுபடியில், பல்வேறு பாதிப்புகள் தவிர்க்கப்படுவதாக, உடுமலை பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.உடுமலை கணக்கம்பாளையம், குட்டியகவுண்டனுார், போடிபட்டி, பள்ளபாளையம் உட்பட பகுதிகளில், கிணற்றுப்பாசனத்துக்கு, சின்னவெங்காயம் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. முன்பு, நேரடி பாசன முறையில், இச்சாகுபடியில், நீர் பாய்ச்சி வந்தனர். இதனால், அதிக தண்ணீர் தேவை இருந்தது. தற்போது, பரவலாக சொட்டு நீர் பாசன முறைக்கு, விவசாயிகள் மாறியுள்ளனர்.விவசாயிகள் கூறியதாவது: விதை மற்றும் நாற்று முறையில், நடவு செய்கிறோம். நடவுக்கு பின்னர் உயிர் தண்ணீரும், பின்னர், 7 நாட்கள் இடைவெளியில், தொடர்ந்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.நேரடி பாசன முறையில், வாய்க்கால் ஏற்படுத்தி, பார் அமைத்தல் உட்பட பணிகளுக்கு, தொழிலாளர்கள் தேவை அதிகமிருக்கும்; அதிக தண்ணீரும் தேவைப்படும். சொட்டு நீர் பாசனத்தில், குறைந்தளவு தண்ணீரே தேவைப்படுகிறது; களைகளை எளிதாக அகற்றலாம். தொழிலாளர் தேவையும் குறைவாகும்.மேலும், மழைக்காலத்தில், தண்ணீர் தேங்கி, பயிர்கள் அழுகும். புதிய நடைமுறையில், மேட்டுப்பாத்தி அமைப்பதால், இப்பிரச்னையும் ஏற்படுவதில்லை. காய்கறி பயிர்களுக்கு, மானியத்தில், சொட்டு நீர் பாசனம் அமைக்க, நடைமுறைகளை எளிமைப்படுத்தினால், அதிகமானோர் பயன்பெறுவார்கள்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X