பொள்ளாச்சி:பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில், விளை நிலத்தில் யானைகள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகளில் ஊடுருவல் அதிகமுள்ளது. வன விலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, குறைந்த அதிர்வை தரும் மின்வேலி அமைக்கலாம்.சூரிய சக்தியால் இயங்கும் வேலி அமைப்பது நடைமுறையில் உள்ளது. இதற்கு உதவியாக, சோலார் மின்வேலி அமைக்க மானியம் வழங்கும் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது.வேளாண் பொறியியல் துறை வாயிலாக, இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. திட்டத்தில், அதிகபட்சமாக இரண்டு ெஹக்டேர் அல்லது, 1,245 மீட்டருக்கு வேலி அமைக்கலாம். இதில், ஐந்து வரிசையுள்ள வேலி அமைக்க மீட்டருக்கு உத்தேச செலவாக, 250 ரூபாய் கணக்கிடப்படுகிறது. ஏழு வரிசைக்கு, 350 ரூபாய்; 10 வரிசைக்கு, 450 ரூபாய் கணக்கிடப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில், வேலி அமைக்கசெலவாகும் தொகையில், 50 சதவீதம் அல்லது, 2.18 லட்சம் ரூபாய் எது குறைவோ அது அதிகபட்ச மானியமாக வழங்கப்படுகிறது. சோலார் மின்வேலி அமைக்க ஆர்வமுள்ள விவசாயிகள், மீன்கரை ரோட்டில் உள்ள வேளாண் பொறியியல் துறையை தொடர்பு கொள்ளலாம், என, உதவி செயற்பொறியாளர் பாலகிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE