பொது செய்தி

இந்தியா

பாக்.,கில் கோவில் இடிப்பு மத்திய அரசு கண்டனம்

Added : ஜன 02, 2021
Share
Advertisement
புதுடில்லி:நம் அண்டை நாடான பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணம், கரக் மாவட்டம், தேரி கிராமத்தில் பகவான் கிருஷ்ணர் கோவில், 1919ல் கட்டப்பட்டது. இதன் ஒரு பகுதி, 1997ல் இடிக்கப்பட்ட நிலையில், நீதிமன்ற தலையீட்டால், 2015ல் சீரமைக்கப்பட்டது.இந்நிலையில், ஆக்கிரமிப்பு நிலத்தில் கோவில் கட்டப்பட்டதாக கூறி, சில நாட்களுக்கு முன் கோவிலை, 1,500க்கும் மேலானோர் திரண்டு இடித்ததுடன், தீ

புதுடில்லி:நம் அண்டை நாடான பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணம், கரக் மாவட்டம், தேரி கிராமத்தில் பகவான் கிருஷ்ணர் கோவில், 1919ல் கட்டப்பட்டது. இதன் ஒரு பகுதி, 1997ல் இடிக்கப்பட்ட நிலையில், நீதிமன்ற தலையீட்டால், 2015ல் சீரமைக்கப்பட்டது.

இந்நிலையில், ஆக்கிரமிப்பு நிலத்தில் கோவில் கட்டப்பட்டதாக கூறி, சில நாட்களுக்கு முன் கோவிலை, 1,500க்கும் மேலானோர் திரண்டு இடித்ததுடன், தீ வைத்து எரித்தனர்.இது குறித்து, பாக்., உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியதுடன், கோவில் இடிப்பு குறித்த வழக்கின் விசாரணை வரும், 5ம் தேதி நடைபெறும் என, அறிவித்தார். இதனால் கோவிலை இடித்த, 25க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்ட்டனர்.

அந்நாட்டின் மத விவகாரங்கள் துறை அமைச்சர் நுாருல் ஹக் காத்ரி, ''இது, சிறுபான்மையினருடனான மத நல்லிணக்கத்திற்கு எதிரான சதி,'' என்றார். அங்கு மீண்டும் கோவில் கட்டக்கோரி, ஹிந்துக்கள் கராச்சியில் திரண்டு போராட்டம் நடத்தினர்.இந்நிலையில், கோவில் இடிக்கப்பட்டதற்கு அந்நாட்டு அரசிடம், மத்திய அரசு நேற்று கண்டனம் தெரிவித்து உள்ளது.இதற்கிடையே, பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாண முதல்வர் மெகமூத் கான், ''அரசு செலவிலேயே, கோவில் கட்டித் தரப்படும்,'' என, உறுதி அளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X