எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

புயல் நிவாரணம் ரூ.600 கோடி: வேளாண் துறை எதிர்பார்ப்பு

Updated : ஜன 02, 2021 | Added : ஜன 02, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
விவசாயிகளுக்கு புயல் நிவாரணம் வழங்க, 600 கோடி ரூபாயை வழங்கும்படி, மத்திய குழுவிடம், வேளாண் துறையினர் கேட்டுள்ளனர்.மாநிலம் முழுதும், நெல் உள்ளிட்ட தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சிறுதானியங்கள் உள்ளிட்ட வேளாண் பயிர்கள் சாகுபடியில், விவசாயிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.காய்கறிகள், கீரைகள், மூலிகைகள், வாசனை பொருட்கள், பழவகைகள் உள்ளிட்ட தோட்டக்கலை
 புயல் நிவாரணம்,  வேளாண் துறை, எதிர்பார்ப்பு

விவசாயிகளுக்கு புயல் நிவாரணம் வழங்க, 600 கோடி ரூபாயை வழங்கும்படி, மத்திய குழுவிடம், வேளாண் துறையினர் கேட்டுள்ளனர்.

மாநிலம் முழுதும், நெல் உள்ளிட்ட தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சிறுதானியங்கள் உள்ளிட்ட வேளாண் பயிர்கள் சாகுபடியில், விவசாயிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.காய்கறிகள், கீரைகள், மூலிகைகள், வாசனை பொருட்கள், பழவகைகள் உள்ளிட்ட தோட்டக்கலை சாகுபடியும் நடந்து வருகிறது.


இந்நிலையில், டிசம்பரில் உருவான, 'நிவர்' புயலால், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், 40 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பயிர் பாதிப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து உருவான, 'புரெவி' புயலால் பெய்த கனமழையாலும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ராமேஸ்வரம் உள்பட, 15 மாவட்டங்களில், 6 லட்சம் ஏக்கருக்கு மேலான பயிர்கள் பாதிக்கப்பட்டன.தமிழகத்தில் ஏற்பட்ட பயிர் சேதங்களை, மத்திய குழுவினர் இரண்டு கட்டங்களாக ஆய்வு செய்து சென்றனர். விரைவில், மத்திய அரசிடம் அறிக்கை சமர்பிக்கப்பட உள்ளது.

அறிக்கையை ஆய்வு செய்து, தமிழகத்திற்கு புயல் நிவாரணத்தை மத்திய அரசு அறிவிக்க உள்ளது.பயிர் சேதங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க, 600 கோடி ரூபாயை வேளாண் துறையினர் கேட்டுள்ளனர்.இதில், வேளாண் பயிர்களுக்கு, 500 கோடி ரூபாய்; தோட்டக்கலை பயிர்களுக்கு, 100 கோடி ரூபாயும் அடக்கம்.மத்திய அரசு நிதி ஒதுக்கியதும், விவசாயிகளுக்கு உடனுக்குடன் நிவாரணம் வழங்க, வேளாண் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-ஜன-202108:47:47 IST Report Abuse
ஆப்பு எதுக்கு தனியா நிவாரணம்? பயிர் காப்பீட்டில் 9000 கோடி குடுத்ததா அரசு விளம்பரங்களில் போட்டுக்குறாங்களே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X